கோடங்கிப்பட்டி பிரிவில் விபத்து; மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிப்பட்டி பிரிவு உள்ளது. இங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ராயனூர், கோடங்கிப்பட்டி ஆகிய ஊர்களுக்கு இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும். நெடுஞ்சாலையை கடக்கும்போது, வேகமாக வரும்

கரூர்: கரூர் அருகே உள்ள கோடங்கிப்பட்டி பிரிவு சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், மேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கோடங்கிப்பட்டி பிரிவு உள்ளது. இங்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ராயனூர், கோடங்கிப்பட்டி ஆகிய ஊர்களுக்கு இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும். நெடுஞ்சாலையை கடக்கும்போது, வேகமாக வரும் லாரி, கார் முதலான வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுவது அன்றாட நிகழ்வாகி வருகிறது.இதனால், பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இங்கு மேம்பாலம் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை, அரசு கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்த சாலை வழியாக, தினமும் கரூருக்கு ஏராளமானோர், வேலைக்கு சென்று வருகின்றனர். மேலும், ஈசநத்தம் உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டும். சாலையைக் கடக்கும் இடத்தில் மின்விளக்குகள் இல்லை. இருட்டில் வழித்தடம் தெரியாமல், டூவீலரில் வருபவர்கள், மின்னல் வேகத்தில் செல்லும் லாரிகளால், விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 24க்கும் மேற்பட்டவர்கள் விபத்தில் பலியாகி உள்ளனர். விபத்து ஏற்பட்ட ஒவ்வொரு முறையும் மறியல் போராட்டம் நடக்கும். அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பரிந்துரை செய்து, பாலம் கட்டப்படும் என, அதிகாரிகள் சமாதானம் செய்கின்றனர். அதன்பின், மறந்து விடுகின்றனர். சாலையில் வாகன ஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில், கூண்டு அமைத்து, 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். மேம்பாலம் அமைக்க, போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X