பொது செய்தி

தமிழ்நாடு

திசு வாழைக் கன்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அன்னுார்:திசு வாழைக் கன்றுகளை இலவசமாக பெற, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.தோட்டக்கலைத்துறை அன்னூர் வட்டார உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னுார் வட்டாரத்தில், சிறு, குறு, பெரிய விவசாயிகள், வாழை பயிரிட விரும்பினால், தேசிய தோட்டக்கலை திட்டத்தில், ஜீ 9 ரக, திசு வாழை கன்றுகளை இலவசமாக பெறலாம். அதிகபட்சமாக, ஒரு விவசாயிக்கு, ஐந்து ஏக்கருக்கு, ஐந்து

அன்னுார்:திசு வாழைக் கன்றுகளை இலவசமாக பெற, தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.தோட்டக்கலைத்துறை அன்னூர் வட்டார உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கை:அன்னுார் வட்டாரத்தில், சிறு, குறு, பெரிய விவசாயிகள், வாழை பயிரிட விரும்பினால், தேசிய தோட்டக்கலை திட்டத்தில், ஜீ 9 ரக, திசு வாழை கன்றுகளை இலவசமாக பெறலாம். அதிகபட்சமாக, ஒரு விவசாயிக்கு, ஐந்து ஏக்கருக்கு, ஐந்து ஆயிரம் வாழை கன்றுகளை இலவசமாக பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஆதார் கார்டு நகல், சிட்டா, அடங்கல், வங்கி பாஸ் புத்தகம் நகல் ஆகியவற்றுடன் அலுவலகத்தில் விண்ணப்பம் தரலாம்.கண்ணம்பாளையம் அல்லது ஆனைகட்டியில் உள்ள அரசு தோட்டக்கலை இல்லத்தில், வாழைக் கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அன்னூர், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம், நாரணாபுரம், கஞ்சப்பள்ளி, ஆம்போதி, அல்லப்பாளையம் மற்றும் வடக்கலூரைச் சேர்ந்தவர்கள் 97919 98833 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.குப்பேபாளையம், காட்டம்பட்டி, குன்னத்தூர், பிள்ளையப்பம்பாளையம், கரியாம்பாளையம், பசூர், அ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள் 95784 52676 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், பொகலூர், வடவள்ளி, காரே கவுண்டன்பாளையம், ஒட்டர்பாளையம், கணுவக்கரை பகுதி விவசாயிகள் 99433 66422 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X