சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், மத்திய அரசையும் கண்டித்து, காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெட்ரோல் பங்க் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ரஹமத்துல்லா முன்னிலை வகித்தார். அன்னுார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொதுச்
 பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்., ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், மத்திய அரசையும் கண்டித்து, காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள பெட்ரோல் பங்க் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ரஹமத்துல்லா முன்னிலை வகித்தார். அன்னுார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், புருஷோத்தமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் காங்., பொது செயலாளர் ராபின், நகர எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் துரைசாமி, சிறுபான்மை பிரிவு தலைவர் அசன் முகமது உட்பட பலர் பங்கேற்றனர்.அன்னுார்* திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., சார்பில், அன்னுார் அருகே பொகலுாரில் பெட்ரோல் பங்க் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொதுச் செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். கிராம கமிட்டி தலைவர் செந்தாமரைக்கண்ணன் முன்னிலை வகித்தார். சேவா தள மாநில இணை செயலாளர் அறிவழகன், ஓ.பி.சி., அணி தொகுதி தலைவர் ராசு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார், நகர நிர்வாகி கார்த்திகேய பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.பெ.நா.பாளையம்* பெரியநாயக்கன்பாளையம் வட்டார காங்., கமிட்டி சார்பில், துடியலூர் அருகே பன்னிமடை பெட்ரோல் பங்க் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வட்டார தலைவர் மோகன்ராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் காந்தகுமார், வட்டார செயலாளர்கள் சூர்யா வெள்ளிங்கிரி, பரமேஸ்வரன், தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.* மேட்டுப்பாளையம் ரோடு, சின்ன மத்தம்பாளையம் அருகே உள்ள கோட்டை பிரிவில் உள்ள பெட்ரோல் பங்க் முன், கூடலுார் எண். 4 வீரபாண்டி, பிளிச்சி ஊராட்சி காங்., கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்., மாநில செயலாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னராஜ், விவசாய பிரிவு மாவட்ட துணை தலைவர் ராமராஜ், கிராம காங்., கமிட்டி தலைவர் நடராஜ், கூடலூர் நகர தலைவர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலாளர் ராஜசேகர் நன்றி கூறினார். இதேபோல, துடியலுார், கவுண்டம்பாளையம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.கருமத்தம்பட்டி* கோவை வடக்கு மாவட்ட காங்., சார்பில், கருமத்தம்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்டபொதுச்செயலாளர் ரங்கசாமி, கந்தசாமி, துரைமணி, நகர தலைவர் பாலசுப்பிரமணியம், நெசவாளர் அணி தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். -நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X