பொது செய்தி

தமிழ்நாடு

'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம்: மனுக்கள் மீது விசாரணை 'விறுவிறு'

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சூலுார்:'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடக்கிறது.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற துறையை உருவாக்கி, சிறப்பு அதிகாரியையும் நியமித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது, 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், என, அறிவித்திருந்தார்.அதன்படி,

சூலுார்:'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடக்கிறது.முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன், 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற துறையை உருவாக்கி, சிறப்பு அதிகாரியையும் நியமித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது பெறப்பட்ட மனுக்கள் மீது, 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும், என, அறிவித்திருந்தார்.அதன்படி, பிரசாரத்தின் போது பெறப்பட்ட மனுக்கள், தற்போது முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும் மனுக்கள், துறை வாரியாக பிரிக்கப்பட்டு, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண், வேலைவாய்ப்பு என்பன உள்ளிட்ட துறைகள் வாரியாக அந்தந்த வட்டார அலுவலகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அதன்படி, சூலுார் யூனியன் அலுவலகத்துக்கு நேற்று வரை, 380 மனுக்கள் வந்துள்ளன. இதேபோல், மற்ற துறைகளுக்கும் ஏராளமான மனுக்கள் வந்துள்ளன.இதுகுறித்து, யூனியன் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்துக்கென நியமிக்கப்பட்ட தனி அலுவலர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தினமும் அனுப்பப்படும் மனுக்களில் உள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொள்வார். மனுதாரரிடம், மனு விபரங்களை கேட்டு குறிப்பெடுத்து, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வார். அவை, மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர், கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் முதல்கட்ட பணிகள் துவங்கும்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X