பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மையங்களில் மாவட்ட அதிகாரி ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னூர் வட்டாரத்தில், சத்துணவு திட்ட மாவட்ட அதிகாரி ஆய்வு செய்தார்.அன்னுார் ஒன்றியத்தில், 69 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஐந்து மேல்நிலை, என, 93 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 3,344 பேர், ஆறு முதல் 10 வரை, 1,758 பேர் என, 5,102 பேர் சத்துணவு உட்கொள்கின்றனர். இதில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ,

அன்னுார்:அன்னூர் வட்டாரத்தில், சத்துணவு திட்ட மாவட்ட அதிகாரி ஆய்வு செய்தார்.அன்னுார் ஒன்றியத்தில், 69 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஐந்து மேல்நிலை, என, 93 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. இதில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 3,344 பேர், ஆறு முதல் 10 வரை, 1,758 பேர் என, 5,102 பேர் சத்துணவு உட்கொள்கின்றனர். இதில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு சத்துணவுக்கு பதில், அரிசி, பருப்பு மற்றும் முட்டை, கடந்த, இரண்டு நாட்களாக சத்துணவு மையங்களில் வழங்கப்படுகிறது. பெற்றோர் அல்லது பாதுகாவலர் வந்து சத்துணவு பொருட்களை பெற்று செல்கின்றனர்.கோவை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஸ்ரீதர், நேற்று அன்னுார் தெற்கு, வடக்கு மற்றும் நாகமாபுதூர் துவக்கப் பள்ளிகளில் ஆய்வு செய்தார். சத்துணவு பொருள் வாங்க வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்; சமூக இடைவெளி விட்டு பொருட்களை பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.சொக்கம்பாளையம், காந்திஜி அரசு மேல்நிலைப்பள்ளியில், 25 சென்ட் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தை பார்வையிட்டார். சத்துணவு மையத்துக்கு தேவைப்படும் காய்கறிகளை, பள்ளி வளாகத்திலேயே விளைவிப்பதற்காக தலைமையாசிரியர் செந்தில்குமார், அமைப்பாளர் மருதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். பின், ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு விநியோகம் குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) மணிமாறன் மற்றும் அமைப்பாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X