பொது செய்தி

தமிழ்நாடு

அருமையான வாய்ப்பு... தவற விடாதீங்க...! விவசாயிகள் பயன்பெற அழைப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:'துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில், விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டு பயன் பெறலாம்' என, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.கோவை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக, பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் கருவிகள் அமைத்து, குறைவான தண்ணீரை பயன்படுத்தி, அதிக சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு வழிமுறை

பெ.நா.பாளையம்:'துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில், விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டு பயன் பெறலாம்' என, வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.கோவை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக, பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் கருவிகள் அமைத்து, குறைவான தண்ணீரை பயன்படுத்தி, அதிக சாகுபடி செய்ய, விவசாயிகளுக்கு வழிமுறை வழங்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் அரசின் மானியம் பெற உள்ள விவசாயிகள், துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்திலும் சேர்ந்து பயன்பெற, வேளாண்மை துறை அழைப்பு விடுத்துள்ளது.நடப்பாண்டில் புதிதாக, நுண்ணீர் பாசன திட்டத்தில், பதிவு செய்ய உள்ள விவசாயிகள், துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில் பயன்பெற பதிவு செய்ய வேண்டும். மின் மோட்டார் வாங்க அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய், நீர்க்குழாய் பி.வி.சி., பைப் வாங்க, 10 ஆயிரம் ரூபாய் வரை, தரை நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க ஒரு கன மீட்டருக்கு, 350 ரூபாய் வீதம், 115 கிலோ மீட்டருக்கு அதிகபட்சமாக, 40 ஆயிரம் ரூபாய் என, மொத்தம், 65 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.திட்டத்தில் பதிவு செய்து பயன்பெற விரும்பும் விவசாயிகள், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாயி சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார், ரேஷன் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் நகலுடன், அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி, கோவை நுண்ணீர் பாசனம் நீர்வடிப்பகுதி வேளாண் துணை இயக்குனர் ஷபி அகமது ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X