அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி :உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் தி.மு.க., சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை, தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, கோவை மேற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஆகியவற்றின் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட
 தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவி :உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் தி.மு.க., சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை, தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு, கோவை மேற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் ஆகியவற்றின் சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட காய்கறிகள் வழங்க திட்டமிடப்பட்டது. இதன் துவக்க விழா, பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள மைதானத்தில் நடந்தது. தி.மு.க.,வின் மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, நிவாரண பொருட்களை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.தி.மு.க., பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் கார்த்தி கூறுகையில், ''கவுண்டம்பாளையம் தொகுதி முழுவதும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை மற்றும் காய்கறி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 350 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. படிப்படியாக அனைவருக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.நிகழ்ச்சியில், தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவை மேற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X