பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு மருந்து 'பயோபோர்' விண்ணப்பம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா சிகிச்சைக்கு கண்டுபிடித்துள்ள புதிய மருந்திற்கு, அவசர கால பயன்பாட்டு உரிமம் வழங்கக் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்திற்கு, 'பயோபோர் இந்தியா' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பயோபோர் இந்தியா நிறுவனம், 'அவிப்டடில்' என்ற கொரோனா சிகிச்சை மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது குறித்து, பயோபோர் இந்தியா

புதுடில்லி:கொரோனா சிகிச்சைக்கு கண்டுபிடித்துள்ள புதிய மருந்திற்கு, அவசர கால பயன்பாட்டு உரிமம் வழங்கக் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்திற்கு, 'பயோபோர் இந்தியா' நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பயோபோர் இந்தியா நிறுவனம், 'அவிப்டடில்' என்ற கொரோனா சிகிச்சை மருந்தை கண்டுபிடித்துள்ளது. இது குறித்து, பயோபோர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜகதீஷ் பாபு ரங்கிஷெட்டி கூறியதாவது:கடந்த ஓராண்டாக கொரோனா சிகிச்சைக்கான மருந்து கண்டுபிடிப்பில் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதன்படி தயாரிக்கப்பட்ட அவிப்டடில் மருந்து, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டோருக்கு, அவிப்டடில் மருந்து நிவாரணம் அளிப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவிப்டடில் மருந்திற்கு, அவசர கால பயன்பாட்டு உரிமம் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்ததும் மருந்து தயாரிப்பு துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார். கொரோனா சிகிச்சைக்கான, 'பேவிபிரவிர்' மருந்து தயாரிக்க, பயோபோர் நிறுவனம் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X