கொல்லப்பட்ட மீனவர்கள் வாரிசுகளுக்கு ரூ.10 கோடி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:'இத்தாலிய கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள மீனவர்கள் இருவரின் வாரிசுகளுக்கு, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 2012ல், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கேரள மீனவர்கள் இருவரை, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் சுட்டுக் கொன்றனர். இதை அடுத்து, இருவரும் கைது

புதுடில்லி:'இத்தாலிய கடற்படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட கேரள மீனவர்கள் இருவரின் வாரிசுகளுக்கு, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012ல், இந்திய எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கேரள மீனவர்கள் இருவரை, இத்தாலிய கடற்படை வீரர்கள் இருவர் சுட்டுக் கொன்றனர். இதை அடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் இத்தாலி திரும்ப அனுமதிக்க பட்டனர்.

இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான விடுமுறைக் கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொல்லப்பட்ட இரு மீனவர்களின் வாரிசுகளுக்கு, இத்தாலி 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமர்வு பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கில் இறந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க, வரும் 15ல் உத்தரவிடப்படும். இத்தொகையை இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய முறையில் வழங்க, கேரள உயர் நீதிமன்றத்திடம் அறிவுறுத்தப்படும். அத்துடன், இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படும். அவர்கள் மீது, சர்வதேச மத்தியஸ்த தீர்ப்பாய உத்தரவுப்படி, இத்தாலி அரசு வழக்கு தொடுத்து தண்டனை பெற்றுத் தரும்.இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X