பிரபல நடிகை மீது தேச துரோக வழக்கு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம்:லட்சத்தீவை சேர்ந்த நடிகையும், திரைப்பட இயக்குனருமான ஆயிஷா சுல்தானா மீது, போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக, மத்திய அரசின் சார்பில் பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார்.வழக்கு பதிவுநிர்வாக ரீதியாக அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு, அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து
 பிரபல நடிகை மீது தேச துரோக வழக்கு

திருவனந்தபுரம்:லட்சத்தீவை சேர்ந்த நடிகையும், திரைப்பட இயக்குனருமான ஆயிஷா சுல்தானா மீது, போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக, மத்திய அரசின் சார்பில் பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார்.வழக்கு பதிவுநிர்வாக ரீதியாக அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு, அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையே, லட்சத்தீவை சேர்ந்த திரைப்பட நடிகை ஆயிஷா சுல்தானா, சமீபத்தில் மலையாள, 'டிவி'யின் விவாத நிகழ்வில் பங்கேற்றார்.

அப்போது, 'பிரபுல் கோடாவின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு இல்லாதிருந்த லட்சத்தீவில், தற்போது தினசரி, 100 பேரிடம் தொற்று கண்டறியப்படுகிறது.'இதை அத்தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக, மத்திய அரசு கையில் எடுத்துள்ள உயிர் ஆயுதமாக கருதுகிறேன்' எனக் கூறியுள்ளார்.இந்த கருத்துகளுக்கு எதிராக, அங்குள்ள பா.ஜ., தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

லட்சத்தீவுகளின் பா.ஜ., தலைவர் அப்துல் காதர் ஹாஜி கொடுத்த புகாரின் அடிப்படையில், தேச துரோகம், அரசின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில், ஆயிஷா மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


குரல் உரக்க ஒலிக்கும்

இது குறித்து, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் ஆயிஷா வெளியிட்டுள்ள பதிவில், 'என் கருத்தில் உள்ள உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். நான் பிறந்த மண்ணிற்கான போராட்டத்தை, யாருக்கும் அஞ்சாமல் தொடர்வேன். இனி, என் குரல் உரக்க ஒலிக்கும்' எனக் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X