டில்லி முதல்வரின் ஏமாற்று வேலை: ரவிசங்கர் பாய்ச்சல்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
''மக்களுக்கு தேவையான ஆக்சிஜனையே தர முடியாத நிலையில், ரேஷன் பொருட்களை, வீடுகளுக்கே எடுத்து வந்து கொடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது ஏமாற்று வேலை,'' என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக, 'டெலிவரி' செய்யும் திட்டத்தை
டில்லி முதல்வர், ஏமாற்று வேலை , ரவிசங்கர் பாய்ச்சல்

''மக்களுக்கு தேவையான ஆக்சிஜனையே தர முடியாத நிலையில், ரேஷன் பொருட்களை, வீடுகளுக்கே எடுத்து வந்து கொடுப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுவது ஏமாற்று வேலை,'' என, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.

இங்கு ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக, 'டெலிவரி' செய்யும் திட்டத்தை செயல்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கு டில்லி துணை நிலை கவர்னர் அனுமதி மறுத்ததாக, கெஜ்ரிவால் தரப்பில் கூறப்படுகிறது.


இது குறித்து மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:கொரோனா காலத்தில் டில்லி மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் ஆக்சிஜனை, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் தர முடியவில்லை. இவர்களால் ரேஷன் பொருட்களை மட்டும் எப்படி வீடுவீடாக போய் தந்து விட முடியும். எனவே வீடுகளுக்கே ரேஷன் பொருட்களை எடுத்து வந்து கொடுப்பதாக கூறுவது, முழுக்க முழுக்க பொய்யானது.ரேஷன் 'மாபியா'க்களின் பிடியில், டில்லி மாநில அரசு சிக்கியுள்ளது. இந்த கொள்ளையர்கள் தான், அனைத்து ரேஷன் பொருட்களையும் கட்டுப்படுத்துகின்றனர்.

ஆதார் திட்டத்தின் அடிப்படையில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. டில்லி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தான் இந்த திட்டம் அமலாகவில்லை. பொய்யான வாக்குறுதி தந்து மக்களை ஏமாற்ற கெஜ்ரிவால் நினைக்கிறார். எந்த நேரமும், 'டிவி' யில் பேசுவது மட்டுமே கெஜ்ரிவாலின் வேலை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
12-ஜூன்-202120:27:16 IST Report Abuse
தஞ்சை மன்னர் """ மற்ற கட்சியில் இருந்து பி சே பி க்கு வந்தால் தேச பக்தர் விலகினால் தேச துரோகி "" கேவலம் இப்படி ஒரு கட்சி இந்தியாவின் சாபம்
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
12-ஜூன்-202120:26:31 IST Report Abuse
தஞ்சை மன்னர் நம்ம நரேந்திர தாமோதரதாஸ் வாயால் வடை சுடுவதில்லையா அது போல தான் இது
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
12-ஜூன்-202120:14:57 IST Report Abuse
M  Ramachandran அண்ணா அசாரே செய்த தப்பு நம்பி முன்னிறுத்தினர். பதவிக்கு வந்ததும் அண்ணா அஸாரீயை மதிக்க வில்லை.அவர் ஏமாற்றுவதை தவிர வேறு ஒன்றும் தெரியாது. டி வீ யில் தினம் மூஞ்சியை காட்ட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X