மத்திய அமைச்சரவை விரிவாக்கமா? அமைச்சர்களுடன் பிரதமர் ஆய்வு!

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுடில்லி :கொரோனா இரண்டாவது அலையின் போது, ஒரு சில குறிப்பிட்ட அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து, விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.'நாட்டில் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும்' என, பிரதமர்
 மத்திய அமைச்சரவை விரிவாக்ம்,? ,பிரதமர் ஆய்வு!

புதுடில்லி :கொரோனா இரண்டாவது அலையின் போது, ஒரு சில குறிப்பிட்ட அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து, விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

'நாட்டில் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும்' என, பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்தார்.இந்த அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே, நேற்று முன் தினம் முதல், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை, பிரதமர் நேரடியாக ஆய்வு செய்யும் பணியை துவங்கிஉள்ளார்.


டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில், நேற்று முன் தினம் ஐந்து மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜாவடேகர் உட்பட, ஏழு மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது, கொரோனா இரண்டாவது அலையின் போது, சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து, அமைச்சர்களிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
மேலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர், டில்லியில் நேற்று சந்தித்து பேசினர். இந்த கூட்டத்திலும், சில மத்திய அமைச்சர்கள் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து, அடுத்தடுத்து ஆய்வுக் கூட்டங்களை பிரதமர் நடத்துவதால், மத்திய அமைச்சரவை மற்றும் உத்தர பிரதேச அமைச்சரவை விரிவாக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதை அடுத்து, மிக முக்கிய நலத்திட்டங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும், அது தொடர்பாகவே இந்த கூட்டங்கள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
12-ஜூன்-202115:59:20 IST Report Abuse
Ellamman நிர்மலாவை நட்டாவுக்கு பதில் பீஸாபி தலைவராகினால் பீசப்பி தேய்ந்து ஓடாய் போகும். செய்வீர்களா? செய்வீர்களா??/ செய்வீர்களா??
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
12-ஜூன்-202115:58:17 IST Report Abuse
Ellamman யாரை மாத்துறீங்களோ இல்லயாவ்... தயவு செய்து நிர்மலாவிற்கு ஒய்வு விடுங்க.. பாவம்.. உழைத்து ஓடா தேய்ந்தது மட்டும் இல்லாமல் நாட்டையும் திருவோடு எந்த வைத்துவிட்டார்கள்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜூன்-202115:21:39 IST Report Abuse
Pugazh V கனிமொழி அல்லது திருச்சி சிவா அல்லது ஆ.ராசா ஒன்றிய அரசின் அமைச்சரானால்...???? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இதற்கு தான் டெல்லி செல்கிறாரோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X