பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவிகள் வழங்கிய நல் உள்ளங்கள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஊரடங்கால், பலரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் உட்பட வாகனங்கள் இயங்கவில்லை. கோவில்கள் திறக்கப்படாததால், பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு, அரசு வழங்கும் பண உதவித்தொகைகள், உணவு பொருட்கள் ஏதும் கிடைப்பதில்லை.
 நலத்திட்ட உதவிகள் வழங்கிய நல் உள்ளங்கள்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் பா.ஜ., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.ஊரடங்கால், பலரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் உட்பட வாகனங்கள் இயங்கவில்லை. கோவில்கள் திறக்கப்படாததால், பூசாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு, அரசு வழங்கும் பண உதவித்தொகைகள், உணவு பொருட்கள் ஏதும் கிடைப்பதில்லை. இவர்களுக்கு உதவி செய்யும் வகையில், மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.,வும், டி.என்.43 நிறுவனமும் இணைந்து, உதவிப் பொருட்கள் வழங்க முடிவு செய்தனர்.இதற்கான நிகழ்ச்சி, காட்டூர் மகா மாரியம்மன் கோவிலில் நடந்தது. பா.ஜ., நகர தலைவர் உமா சங்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மயில்சாமி முன்னிலை வகித்து, கோவில் பூசாரிகள், ஆட்டோ டிரைவர்கள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என, 175 பேருக்கு உதவி பொருட்களை வழங்கினார். நகர மன்ற முன்னாள் தலைவர் சதீஷ்குமார், மகளிர் அணியினர் மற்றும் பிற அமைப்பினர் பங்கேற்றனர். ஜெகநாதன் நன்றி கூறினார். மேட்டுப்பாளையத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், மருத்துவமனை ஊழியர்கள், காவல் துறையினர், மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு, கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X