அமைதியான பெருந்தொற்று!

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அமைதியான பெருந்தொற்று! உலகில் உள்ள மொத்த வாகனங்களில், 3 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளன. ஆனால், சர்வதேச அளவில் ஏற்படும் சாலை விபத்துகளில், 11 சதவீதம் நம் நாட்டில் நிகழ்கின்றன. இதில் ஆண்டுதோறும், 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கின்றனர். நாட்டில் அமைதியான பெருந்தொற்றாகவே, சாலை விபத்துகள் உள்ளன. ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,பேச்சுக்கே இடமில்லை!நான் பா.ஜ.,வில் சேரப்
அமைதியான பெருந்தொற்று!

அமைதியான பெருந்தொற்று!

உலகில் உள்ள மொத்த வாகனங்களில், 3 சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளன. ஆனால், சர்வதேச அளவில் ஏற்படும் சாலை விபத்துகளில், 11 சதவீதம் நம் நாட்டில் நிகழ்கின்றன. இதில் ஆண்டுதோறும், 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இறக்கின்றனர். நாட்டில் அமைதியான பெருந்தொற்றாகவே, சாலை விபத்துகள் உள்ளன.

ராஜ்நாத் சிங்

ராணுவ அமைச்சர், பா.ஜ.,

பேச்சுக்கே இடமில்லை!

நான் பா.ஜ.,வில் சேரப் போவதாக, உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., தலைவர் ரீட்டா பகுகுணா கூறியிருப்பது, அவரது கற்பனை. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காப்பாற்றுவதில் அக்கறையின்றி, மத்திய பா.ஜ., அரசு செயல்படுகிறது. நான், பா.ஜ.,வில் சேர்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.

சச்சின் பைலட்

மூத்த தலைவர், காங்.,

தொந்தரவு செய்யலாமா?

மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உதவி செய்வதை விட்டு, தொந்தரவு கொடுப்பதையே நோக்கமாக வைத்து செயல்படுகிறது. கொரோனா நெருக்கடி காலத்திலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிடம் அரசியல் கண்ணோட்டத்துடன் மத்திய அரசு செயல்படுவது கவலை அளிக்கிறது.

மணீஷ் சிசோடியா

டில்லி துணை முதல்வர், ஆம் ஆத்மி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X