பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமுகையில் 78 பேருக்கு கொரோனா பரிசோதனை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:சிறுமுகையில் கொரோனா பரிசோதனை முகாம்களில், 78 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.சிறுமுகை பேரூராட்சியில், வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பேரூராட்சி நிர்வாகத்தினர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 18 வார்டுகளில் வீடு வீடாக கணக்கெடுக்க, 63 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில்

மேட்டுப்பாளையம்:சிறுமுகையில் கொரோனா பரிசோதனை முகாம்களில், 78 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.சிறுமுகை பேரூராட்சியில், வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பேரூராட்சி நிர்வாகத்தினர், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 18 வார்டுகளில் வீடு வீடாக கணக்கெடுக்க, 63 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களை சந்தித்து, சளி, காய்ச்சல், உடல் வலி ஏதேனும் உள்ளதா என, கணக்கெடுத்து வருகின்றனர். இதில் உடல் நலம் பாதித்தவர்களை அழைத்து வந்து, கொரோனா பரிசோதனை முகாமில், சளி மாதிரி எடுக்கப்படுகிறது.சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் மாலா, சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோர் கூறியதாவது:பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில், தினமும் உடல்நிலை பாதித்தவர்கள் பற்றி, கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சளி, காய்ச்சல், உடல் வலி இருப்பவர்களை மட்டும், கொரோனா பரிசோதனை முகாமுக்கு அழைத்து வந்து, பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த, 4 நாட்களில், 78 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், இரண்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து கணக்கெடுக்கும் பணிகளும், கிருமி நாசினி மருந்து தெளிப்பும், குளோரின் பவுடர் தூவுதல் ஆகிய பணிகள் நடைபெறும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X