'மாஜி' கமிஷனர் மனு சுப்ரீம் கோர்ட் வேதனை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:'மாநில போலீஸ் மீது நம்பிக்கை இல்லை' என, மும்பை நகர முன்னாள் கமிஷனர் பரம்வீர் சிங் கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகரான மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனராக, பரம்வீர் சிங் பதவி வகித்தார். சொகுசு

புதுடில்லி:'மாநில போலீஸ் மீது நம்பிக்கை இல்லை' என, மும்பை நகர முன்னாள் கமிஷனர் பரம்வீர் சிங் கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகரான மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனராக, பரம்வீர் சிங் பதவி வகித்தார்.


சொகுசு விடுதி

மும்பையில் உள்ள ஓட்டல்கள், சொகுசு விடுதிகளில் இருந்து மாதந்தோறும், 100 கோடி ரூபாய் வசூலித்து தரும்படி, தேசியவாத காங்.,கை சேர்ந்த, அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், போலீஸ் அதிகாரிகளை நிர்ப்பந்திப்பதாக, இவர் குற்றம்சாட்டினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைச்சர் அனில் தேஷ்முக், பதவியை ராஜினாமா செய்தார். பரம்வீர் சிங்கும், மும்பை கமிஷனர் பதவியில் இருந்து, மாநில ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார்.இது தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் நடந்து வருகிறது.இந்நிலையில், முன்னாள் கமிஷனர் பரம்வீர் சிங் தரப்பில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விபரம்:அமைச்சருக்கு எதிராக புகார் கூறிய காரணத்தால், என் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த வழக்குகள் அனைத்தையும், மஹாராஷ்டிராவில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். மாநில போலீசார் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால், வழக்கு விசாரணையை, சி.பி.ஐ., போன்ற தனி அதிகாரம் படைத்த, மத்திய விசாரணை அமைப்பிடம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அதிர்ச்சி

இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'மஹாராஷ்டிர மாநில அரசில், 30 ஆண்டுகள் பணியாற்றிய பரம்வீர் சிங், மாநில அரசு மீது நம்பிக்கை இல்லை எனக் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. கண்ணாடிக்குள் இருந்து கல் எறியக் கூடாது என, நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பரம்வீர் தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X