ஒரே ரேஷன் கார்டு திட்டம் : மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.கொரோனா பாதிப்புகளால் அவதிப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு, உதவித்தொகை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரிய மனு, உச்ச நீதிமன்ற விடுமுறைகால அமர்வில், நேற்று
ஒரே ரேஷன், கார்டு திட்டம்,    மாநிலங்கள், அறிவுறுத்தல்

புதுடில்லி :'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்புகளால் அவதிப்படும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, உணவு பாதுகாப்பு, உதவித்தொகை, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரிய மனு, உச்ச நீதிமன்ற விடுமுறைகால அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

தேசிய அளவில் அமைப்புசாரா தொழிலாளர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்வதற்கான மென்பொருளை உருவாக்குவதில், மத்திய அரசுக்கு ஏன் தாமதம் ஏற்படுகிறது என, புரியவில்லை.கடந்த ஆண்டு ஆக., மாதம் துவங்கிய பணிகள், இதுவரை முடிவுக்கு வரவில்லை. இதே நிலை நீடித்தால், மத்திய அரசின் சார்பில் பிரதமரின், 'கரிப் கல்யாண் யோஜனா' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச உணவு பொருட்களை, புலம் பெயர் தொழிலாளர்களுக்கு நவ., மாதம் வரை எப்படி வழங்க முடியும்.

எனவே புலம் பெயர் தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் ரேஷன் பொருட்களை வாங்கும் வகையில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
12-ஜூன்-202119:29:25 IST Report Abuse
R chandar One nation one ration card tem is a good tem , it should allow all smart ration card attached to Aadhar card , should be validated with all ration shop in India , the support of cash ,free distribution , and subsidy for people should be d by central government and necessary support of funding should also be given by central government , state government should monitor the ution only . These schemes are benefit only when announcement comes from central government as it is been called as one nation ,one ration scheme. Central government should initiate and consider of any request and promises given by state government to the people subject to the 80% support of central and 20% support of state government as state government are only getting the revenue from liquor and petrol products. If state government agrees to enter in to GST then all social benefits scheme should be borne by central government.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
12-ஜூன்-202116:54:14 IST Report Abuse
sankaseshan எதிரி மாநில கட்சிகள் கேட்பார்களா இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடணும்
Rate this:
Cancel
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. - தமிழா ஹிந்துக்களிடம் ஏமாறாதே ,இந்தியா
12-ஜூன்-202113:45:04 IST Report Abuse
கழக ஆட்சி இது தமிழ் மக்களுக்கான ஆட்சி. ஏண்டா ஒரே rationCARD எல்லாம் சொல்லும் நீங்கள் இங்கே வட நாட்டங்கள் rationCARD க்கு பொங்கல் சீர் என்று வாங்குகிறான் இதை தான் மோடி எதிர்பார்க்கிறார் , என் ஒரே ஜாதி ஒரே மதம் என்று கொண்டு வரக்கூடாது நாட்டில் பிரச்சனையே இறுக்கத்தால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X