பொது செய்தி

தமிழ்நாடு

வீதிக்கு 'சீல்' 5 பேருக்கு தொற்று உறுதி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அன்னூர்:அன்னூர் பேரூராட்சியில், ஒரே வீட்டில் நான்கு பேருக்கு தொற்று உறுதியானதால் அந்த வீதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.அன்னுார் ஒன்றியத்தில், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், நேற்று, 27 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், ஐந்து பேர் அரசு மருத்துவமனைக்கும், ஐந்து பேர் தனியார் மருத்துவமனைக்கும், 16 பேர் பாதுகாப்பு மையங்களுக்கும், ஒருவர் வீட்டில் தனிமையில் இருக்கவும்
 வீதிக்கு 'சீல்'  5 பேருக்கு தொற்று உறுதி

அன்னூர்:அன்னூர் பேரூராட்சியில், ஒரே வீட்டில் நான்கு பேருக்கு தொற்று உறுதியானதால் அந்த வீதிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.அன்னுார் ஒன்றியத்தில், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், நேற்று, 27 பேருக்கு தொற்று உறுதியானது. இதில், ஐந்து பேர் அரசு மருத்துவமனைக்கும், ஐந்து பேர் தனியார் மருத்துவமனைக்கும், 16 பேர் பாதுகாப்பு மையங்களுக்கும், ஒருவர் வீட்டில் தனிமையில் இருக்கவும் அனுமதிக்கப்பட்டனர்.இதில், அவிநாசி ரோடு, உப்பு தோட்டம், மூன்றாவது வீதியில், ஒரே வீட்டில் நான்கு பேருக்கும், அருகில் மற்றொரு வீட்டில் ஒருவருக்கும் என, ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த வீதியின் இருபுறமும் தகர சீட்டுகளால் 'சீல்' வைக்கப்பட்டு, நடமாட தடை விதிக்கப்பட்டது. எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், 38 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.அன்னுார் ஒன்றியத்தில், கடந்த ஏழு நாட்களில், 224 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று பாதித்த பகுதியில் 'சீல்' வைக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்களுடன் சுகாதார ஆய்வாளர்கள் ராயப்பன், செல்வகிரி, இனியவன் ஆகியோர் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X