பொது செய்தி

தமிழ்நாடு

என்னமோ நடக்குது...! தடுப்பூசி ஒதுக்கீட்டில் விதிமீறல் என புகார்:பாதிப்பு பகுதிகளுக்கு கவனம் செலுத்த குரல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அன்னுார்:தடுப்பூசி ஒதுக்கீட்டில் விதிமீறல் நடக்கிறது என புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், தொற்று பாதிப்பு அதிகம் அல்லது அதிக மக்கள் தொகை அடிப்படையில், ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தில், ஒரு பேரூராட்சி மற்றும், 21 ஊராட்சிகளில் கடந்த இரு மாதங்களில், 2,200 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். அரசு மற்றும் தனியார்

அன்னுார்:தடுப்பூசி ஒதுக்கீட்டில் விதிமீறல் நடக்கிறது என புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், தொற்று பாதிப்பு அதிகம் அல்லது அதிக மக்கள் தொகை அடிப்படையில், ஊராட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தில், ஒரு பேரூராட்சி மற்றும், 21 ஊராட்சிகளில் கடந்த இரு மாதங்களில், 2,200 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்றனர்.தொற்று அதிகரிப்பால், மக்களிடம் தடுப்பூசி போட ஆர்வம் அதிகரித்துள்ளது. அன்னுார் அரசு மருத்துவமனையிலும், பொகலுார், மூக்கனுார் மற்றும் செம்மாணி செட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதில், அன்னுார் அரசு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக தடுப்பூசி போடுவது இல்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மிகக் குறைந்த அளவிலேயே தடுப்பூசி வருகிறது. இதனால் தினமும் நுாற்றுக்கணக்கானோர் வந்து, பல மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில், சில ஊராட்சிகள் மற்றும் சில தொழிற்சாலைகள் மட்டும் தடுப்பூசி ஒதுக்கீடு பெற்றுள்ளன.முன்னுரிமைஇதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:வயதானவர்கள், கிராமத்தை சேர்ந்தவர்கள், பெண்கள் என பலரும் பல வாரங்களாக தடுப்பூசி கிடைக்காமல் அரசு மருத்துவமனைக்கு நடையாய் நடந்து வருகின்றனர். ஆனால், சில ஊராட்சிகளில், அந்த ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி ஒதுக்கீடு பெற்று போடுகின்றனர். கடந்த வாரம் காட்டம்பட்டி ஊராட்சியில், 300 தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து, நாளை (இன்று) குப்பேபாளையம் மற்றும் குன்னத்துார் ஊராட்சிகளில் அந்த ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படுகிறது.தடுப்பூசி போடுவதற்கு, எந்த ஊராட்சியில் மக்கள் தொகை அதிகம் அல்லது எந்த ஊராட்சியில் தொற்று பரவல் அதிகம் என பார்த்து, அந்த ஊராட்சிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில், அன்னுார் ஒன்றியத்தில் மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், 11 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆனால், இங்கு இதுவரை தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்படவில்லை. இதற்கு அடுத்து காரேகவுண்டம்பாளையம் ஊராட்சியும், இதையடுத்து ஒட்டர் பாளையம், வடக்கலுார் ஊராட்சிகளில் அதிக மக்கள் உள்ளனர்.மசக்கவுண்டன் செட்டிபாளையம், ஒட்டர்பாளையம் ஊராட்சிகளில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளன. ஆனால் தடுப்பூசி ஒதுக்குவதில், மாவட்ட சுகாதாரத்துறை, அதிக மக்கள் தொகை உள்ள ஊராட்சி அல்லது அதிக தொற்று பாதித்த ஊராட்சி என்று இல்லாமல், விதிமுறைக்கு மாறாக, தன்னிச்சையாக, காட்டம்பட்டி, குப்பேபாளையம், குன்னத்துார் என சில ஊராட்சிகளுக்கு தடுப்பூசி ஒதுக்குகிறது.அதுமட்டுமல்லாமல், அதிகளவில் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் பவுண்டரி மற்றும் நூற்பாலைகளில் தடுப்பூசி போடுகிறது. உள்ளூரை சேர்ந்த பல ஆயிரம் பேர் தடுப்பூசி கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், எந்த அளவுகோலின்படி குறிப்பிட்ட சில தொழிற்சாலைகளுக்கும், சில குறிப்பிட்ட ஊராட்சிகளுக்கு மட்டும் தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது என தெரியவில்லை.மாவட்ட நிர்வாகம், அன்னுார் ஒன்றியத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள ஊராட்சி அல்லது மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சி என்னும் அளவுகோலை பின்பற்றி, தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், அன்னுாரின் மையமான அன்னுார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X