பொது செய்தி

தமிழ்நாடு

உங்களுக்கு தான் மருத்துவமனைக்கு தாராளம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அன்னுார்;அன்னுார் மற்றும் பொகலுார் அரசு மருத்துவமனைக்கு பா.ஜ.,வினர் உதவிப் பொருட்கள் வழங்கினர்.கொரோனா காலகட்டத்தில், முன்களப் பணியாளருக்கு, பல்வேறு அமைப்புகள், கட்சியினர் சார்பில், உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அன்னுார் அரசு மருத்துவமனையில், 25 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. பொகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொற்று பாதித்த கர்ப்பிணிகளுக்கு 25

அன்னுார்;அன்னுார் மற்றும் பொகலுார் அரசு மருத்துவமனைக்கு பா.ஜ.,வினர் உதவிப் பொருட்கள் வழங்கினர்.கொரோனா காலகட்டத்தில், முன்களப் பணியாளருக்கு, பல்வேறு அமைப்புகள், கட்சியினர் சார்பில், உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அன்னுார் அரசு மருத்துவமனையில், 25 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. பொகலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொற்று பாதித்த கர்ப்பிணிகளுக்கு 25 படுக்கைகள் கொண்ட பிரத்யேக சிகிச்சை மையம் உள்ளது.இரு மருத்துவமனைகளுக்கும், அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், ரொட்டி, பிஸ்கட், சானிடைசர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது. 'வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், இனி தினமும் 25 ரொட்டி, 25 பாக்கெட் பிஸ்கட், 25 சேனிடைசர், 5 லிட்டர் பால் வழங்கப்படும்' என நிர்வாகிகள் தெரிவித்தனர்.பா.ஜ., ஒன்றிய தலைவர் சத்யராஜ், தொழில் பிரிவு ஒன்றிய தலைவர் ஈஸ்வரன், ஆகியோர் டாக்டர்கள் சக்திவேல், இலக்கிய ஆகியோரிடம் பொருட்களை வழங்கினர். ஓ.பி.சி., அணி மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், மருத்துவம் சாரா வட்டார மேற்பார்வையாளர் கோவிந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X