பொது செய்தி

தமிழ்நாடு

22 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தன்னார்வ அமைப்பு உதவி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கொரோனா கவனிப்பு மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்க, 22 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, தன்னார்வ அமைப்பு நன்கொடையாக வழங்கியுள்ளது.கோவையைச் சேர்ந்த, 'லெட் அஸ் தேங்ஸ்' அறக்கட்டளை சார்பில், 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டன. கஞ்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், கருவியின் பயன்பாடு
 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள்  தன்னார்வ அமைப்பு உதவி

பொள்ளாச்சி:கொரோனா கவனிப்பு மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்க, 22 ஆக்சிஜன் செறிவூட்டிகளை, தன்னார்வ அமைப்பு நன்கொடையாக வழங்கியுள்ளது.கோவையைச் சேர்ந்த, 'லெட் அஸ் தேங்ஸ்' அறக்கட்டளை சார்பில், 22 ஆக்சிஜன் செறிவூட்டிகள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்டன. கஞ்சம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், கருவியின் பயன்பாடு குறித்து விளக்கினார்.சப் - கலெக்டர் கூறுகையில், ''அறக்கட்டளை சார்பில், வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டிகள் பி.ஏ., கல்லுாரி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு அக் ஷயா கல்லுாரியில் செயல்படும் கொரோனா கவனிப்பு மையங்களுக்கு தலா, ஆறு; கஞ்சம்பட்டி, பெரியபோது, நல்லட்டிபாளையம், நெகமம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ஒன்று என பிரித்து வழங்கப்படும். தன்னார்வலர்கள், தொடர்ந்து உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும்,'' என்றார்.நிவாரண நிதி வழங்கல்வால்பாறை சிறுவர் பூங்காவை சேர்ந்த மகுடீஸ்வரன் - கலைவாணி தம்பதியின், குழந்தை சத்யயாழினி,6; இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவர், தனது உண்டியலில் சேர்த்து வைத்திருந்த, 10,000 ஆயிரம் ரூபாயை, நேற்று வால்பாறை வந்த, எம்.எல்.ஏ., உதயநிதியிடம், கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினார். சிறுமியை, உதயநிதி பாராட்டினார்.* உடுமலை, அமராவதி அணை மற்றும் முகாம் பிரிவு அலுவலகங்களில் பணியாற்றும் தொகுப்பூதிய தினக்கூலி 24 பணியாளர்கள், தங்கள் ஊதியத்திலிருந்து, தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக, 14 ஆயிரத்து, 400 ரூபாயை, உடுமலை தாசில்தார் ராமலிங்கத்திடம் வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X