கொரோனா இறப்புக்கு இழப்பீடு அரசு பதில் அளிக்க அவகாசம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு தரக் கோரிய மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் 10 நாள் அவகாசம் அளித்துள்ளது.கொரோனாவால் இறந்தோர் வாரிசுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கவும், இத்தொகையை பெற, இறப்பு சான்றிதழில் கொரோனா காரணம் என குறிப்பிடவும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல

புதுடில்லி:கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு தரக் கோரிய மனு தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க, உச்ச நீதிமன்றம் 10 நாள் அவகாசம் அளித்துள்ளது.

கொரோனாவால் இறந்தோர் வாரிசுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கவும், இத்தொகையை பெற, இறப்பு சான்றிதழில் கொரோனா காரணம் என குறிப்பிடவும், மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது பீஹார் அரசு, கொரோனாவால் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு 4 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளதை சுட்டிக் காட்டி, மத்திய அரசின் நிலை என்ன என அமர்வு கேட்டது. மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''கொரோனாவால் இறந்தோரி ன் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை. இது குறித்த விபரங்களை சேகரித்து வழங்க, இரு வாரங்கள் அவகாசம் தேவை,'' என்றார்.

'இரு வாரங்கள் எதற்கு' என, கேள்வி கேட்ட நீதிபதிகள், 10 நாட்கள் அவகாசம் தருவதாக கூறி, அதற்குள் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X