பொது செய்தி

தமிழ்நாடு

விற்பனைக்கு வழியில்லாமல் வாடும் பூக்கள்: வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:விளைநிலம் முழுவதும் பூத்துக்குலுங்கும், பூக்களை சந்தைப்படுத்த வழியில்லாததால், கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து, வாடி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பூக்கள் சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. முக்கோணம், புங்கமுத்துார், ஆண்டியகவுண்டனுார் உட்பட கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி செய்யும் பகுதிகளில், பூக்கள்
 விற்பனைக்கு வழியில்லாமல் வாடும் பூக்கள்: வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகள்

உடுமலை:விளைநிலம் முழுவதும் பூத்துக்குலுங்கும், பூக்களை சந்தைப்படுத்த வழியில்லாததால், கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து, வாடி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பூக்கள் சாகுபடி பரப்பு குறைவாகவே உள்ளது. முக்கோணம், புங்கமுத்துார், ஆண்டியகவுண்டனுார் உட்பட கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி செய்யும் பகுதிகளில், பூக்கள் சாகுபடியும் தற்போது பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, முகூர்த்த சீசனை இலக்கு வைத்து இச்சாகுபடியை விவசாயிகள் திட்டமிடுகின்றனர். வழக்கமாக, ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், முகூர்த்த சீசனையொட்டி, பூக்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.மல்லி, செண்டுமல்லி, செவ்வந்தி, கோழிக்கொண்டைக்கு இந்த சீசனில் நல்ல விலை கிடைக்கும். ஆனால், நடப்பாண்டு, தொற்று பரவல் காரணமாக, பூக்கள் விற்பனை முற்றிலுமாக பாதித்துள்ளது.ஊரடங்கு காரணமாக, திருமணங்கள் நடத்தவும், கோவில் திருவிழாக்களுக்கும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதனால், கோழிக்கொண்டை பூக்களை கொள்முதல் செய்ய யாரும் வராமல், அவை விளைநிலங்களிலேயே கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டள்ளது.விவசாயிகள் கூறியதாவது: குறுகிய காலத்தில், முகூர்த்த சீசனை இலக்காக வைத்து, கோழிக்கொண்டை சாகுபடி செய்கிறோம். ஏக்கருக்கு, 3 ஆயிரம் கிலோ வரை மலர் அறுவடை செய்யலாம். முன்பு, கோழிக்கொண்டை விலை, கிலோவுக்கு, 70 ரூபாய் அளவுக்கு கிடைத்து வந்தது.தற்போது, கொள்முதல் செய்ய ஆளில்லாமல், பல வாரங்கள் பராமரித்த, செடிகளில், பூத்து குலுங்கிய, பூக்கள், செடியோடு கருகும் நிலையை வேதனையோடு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அடுத்த சீசனில், சாகுபடிக்கு தேவையான விதை, இடுபொருட்கள் மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X