பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு :நகராட்சி அதிகாரிகள் வேடிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறையில் சமீப காலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது.அரசு உத்தரவுக்கு பின் கடந்த
 பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு :நகராட்சி அதிகாரிகள் வேடிக்கை

வால்பாறை:வால்பாறையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் இதைக் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் வால்பாறை அமைந்துள்ளது. மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறையில் சமீப காலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது.அரசு உத்தரவுக்கு பின் கடந்த சில மாதங்களாக கட்டுப்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மீண்டும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில், டீ, உணவுப்பொருட்கள் போன்றவை பிளாஸ்டிக் கவர்களில் வழங்கப்படுகின்றன.காய்கறி கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் காய்கறி விற்பனை செய்கின்றனர். அரசின் உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு, தடை செய்யப்பட்ட பொருட்கள் மீண்டும் பயன்டுத்தப்படுகின்றன.இதனைக் கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை கடைகள் மற்றும் மருந்து கடைகளுக்கு, ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் மற்றும் ஐந்து ஆயிரம் ரூபாயும், சிறிய வணிக விற்பனையாளர்களுக்கு, 100 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.அதேபோல, மொத்த விற்பனையாளர் மற்றும் இவற்றை பயன்படுத்தும் நுகர்வோருக்கு, அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இனி வரும் காலங்களில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் உபயோகிப்பதை, வால்பாறை மக்கள் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X