இந்தியருக்கு 9 மாதம் சிறை

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிங்கப்பூர்:இலங்கையை சேர்ந்தவர், சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்க உதவிய இந்தியருக்கு, ஒன்பது மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆசிய நாடான சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் வசிப்பவர் பரமசிவம் சீமான், 37. தமிழகத்தைச் சேர்ந்த இவர், சிங்கப்பூர் ரோவல் சாலையில் ஒரு வீட்டை தன் நண்பர் பெயரில் வாடகைக்கு எடுத்தார். அதில் இலங்கையை சேர்ந்த அப்துல் காதிர் நைனா என்பவரை தங்க

சிங்கப்பூர்:இலங்கையை சேர்ந்தவர், சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்க உதவிய இந்தியருக்கு, ஒன்பது மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆசிய நாடான சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் வசிப்பவர் பரமசிவம் சீமான், 37. தமிழகத்தைச் சேர்ந்த இவர், சிங்கப்பூர் ரோவல் சாலையில் ஒரு வீட்டை தன் நண்பர் பெயரில் வாடகைக்கு எடுத்தார். அதில் இலங்கையை சேர்ந்த அப்துல் காதிர் நைனா என்பவரை தங்க வைத்து, வாடகை வசூலித்து வந்தார்.

அதிகாரிகள் விசாரிக்கும் போது, எப்படி பதில் அளிக்க வேண்டும் என்றும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருந்த நண்பருக்கு ஆலோசனை கூறியுள்ளார். இந் நிலையில் கடந்த ஆண்டு, குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்திய போது, அப்துல் காதிர், தன் விசா காலம் முடிந்து, 150 நாட்களுக்கும் மேலாக தங்கியிருப்பது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட அப்துல் காதிருக்கு, ஒரு மாத சிறை தண்டனையும், மூன்று கசையடிகளும் அளிக்கப்பட்டது. வெளிநாட்டை சேர்ந்தவரை சட்டவிரோதமாக தங்க வைத்திருந்த வழக்கில், பரமசிவம் சீமானுக்கு, ஒன்பது மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jsjsui -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூன்-202111:15:57 IST Report Abuse
jsjsui Tirunelveli singamle
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X