ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீர் ;நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:கொடிங்கியம் ஊராட்சி காந்திநகரில், ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீர், சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது.உடுமலை அடுத்த கொடிங்கியம் ஊராட்சி காந்திநகரில், அதிகப்படியான மக்கள் வசிக்கின்றனர். அங்கு, போதுமான அளவில், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதனால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. ஆங்காங்கே தேங்கி
 ரோட்டில் வழிந்தோடும் கழிவுநீர் ;நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம்

உடுமலை:கொடிங்கியம் ஊராட்சி காந்திநகரில், ரோட்டில் வழிந்தோடும் கழிவு நீர், சுகாதார பாதிப்பை ஏற்படுத்துகிறது.உடுமலை அடுத்த கொடிங்கியம் ஊராட்சி காந்திநகரில், அதிகப்படியான மக்கள் வசிக்கின்றனர். அங்கு, போதுமான அளவில், கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதனால், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசு உற்பத்தியாகி, நோய் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'கழிவு நீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. வழிந்தோடும் கழிவுநீரால் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவதுடன், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். இல்லையெனில், டெங்கு பரவல் ஏற்படவும் வாய்ப்புள்ளது,'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X