பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய திட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு: வேளாண் துறையினர் தகவல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்திட்டத்தில், மடத்துக்குளம் பகுதியில், 500 மண் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக வேளாண்மைதுறையினர் தெரிவித் துள்ளனர்.மடத்துக்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:மடத்துக்குளம் பகுதியில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்திட்டத்தில், 2021 -- 22 ஆம் ஆண்டு, 500 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு
 தேசிய திட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு: வேளாண் துறையினர் தகவல்

மடத்துக்குளம்:தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்திட்டத்தில், மடத்துக்குளம் பகுதியில், 500 மண் மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக வேளாண்மைதுறையினர் தெரிவித் துள்ளனர்.மடத்துக்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி கூறியதாவது:மடத்துக்குளம் பகுதியில், தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்திட்டத்தில், 2021 -- 22 ஆம் ஆண்டு, 500 மண் மாதிரிகள் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முதல் கட்டமாக பணிகள் தொடங்கியுள்ளன.ரசாயன உரங்கள் அதிகமாக உபயோகிப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மண் பரிசோதனை மிகவும் அவசியமாகும். மண்வளத்தை நிலை நிறுத்துவதால், பயிரின் உற்பத்தியை அதிகரிப்பதோடு லாபத்தையும் மேம்படுத்தலாம்.தேவையான நேரத்தில் மண் பரிசோதனை செய்வதால், சரிவிகித சம அளவு சத்துக்களை பயன்படுத்தி பயிரின் உற்பத்தியை பெருக்க முடியும்.அறுவடைக்கு பின்பும், உழவுக்கு முன்பும் மண்மாதிரிகளை சேகரிக்க வேண்டும். வயலின் ஓரங்கள், வாய்க்கால் வரப்பு ஓரங்கள், மரநிழல், ஈரமான பகுதி, உரமிட்ட நிலங்கள் ஆகிய இடங்களில் எடுக்கக்கூடாது.ஒரு ஏக்கர் பரப்பில், 10 முதல் 12 இடங்களில் ஆங்கில எழுத்து 'வீ' வடிவில் அரைஅடி முதல் முக்கால்அடி ஆழம் தோண்டி, மண்ணை அப்புறப்படுத்தி விட்டு, அந்த குழியின் பக்கவாட்டில் உள்ள மண்ணை மேலிருந்து கீழாக சுரண்டி எடுக்க வேண்டும்.இந்த மண்ணை நிழலில் உலர்த்தி, கல்வேர் போன்றவைகளை நீக்கம் செய்து துணிப்பையில் சேகரிக்க வேண்டும். இதனுடன் விவசாயிகளின் பெயர், முகவரி, பிளாக் எண், பாசன விபரம், பயிர்சாகுபடி, ஆகிய தகவல்களுடன் பரிசோதனை கட்டணம் 20 ரூபாய் மட்டும் சேர்த்து, சம்பந்தப்பட்ட பகுதி உதவி வேளாண்மை அலுவலரிடம் வழங்க வேண்டும்.அனைத்து விவசாயிகளும், மண்மாதிரிகளை சேகரித்து மண் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X