பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தொடரில் வெளியாகுமா மாவட்ட அறிவிப்பு? பொள்ளாச்சி மக்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொள்ளாச்சி மக்கள் காத்திருக்கின்றனர்.'தென்னை நகரம்' பொள்ளாச்சி, ஆங்கிலயேர் காலத்தில், 1857ல் சப் - கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டது.நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டம்

பொள்ளாச்சி:தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பில் பொள்ளாச்சி மக்கள் காத்திருக்கின்றனர்.'தென்னை நகரம்' பொள்ளாச்சி, ஆங்கிலயேர் காலத்தில், 1857ல் சப் - கலெக்டர் தலைமையில் இயங்கும் வருவாய் கோட்டமாக அறிவிக்கப்பட்டது.நான்கு தாலுகாக்களை உள்ளடக்கிய பொள்ளாச்சி வருவாய் கோட்டம் மொத்தம், 1344.31 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. கடந்த, 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6 லட்சத்து 37 ஆயிரத்து 091 பேர் கொண்ட பெரிய வருவாய் கோட்டமாக உள்ளது.முற்றிலும் விவசாயம் சார்ந்த பகுதியாக பொள்ளாச்சி உள்ளது. சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ள பொள்ளாச்சி, சினிமா துறையினரின் சொர்க்க பூமியாக உள்ளது. தென்னை மற்றும் அது சார்ந்த பொருட்கள் உற்பத்தி செய்வதில் மாநிலத்தில் முதன்மையான இடம் வகிக்கிறது.எட்டாத வால்பாறைவால்பாறை பகுதியை சேர்ந்த மக்கள், நீண்டதுாரம் பயணம் செய்து கோவை கலெக்டரை சந்திக்க வேண்டும். இதனால், அவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். கடைக்கோடி கிராமங்களும் எளிதில் அணுகும் வகையில் மாவட்டத் தலைநகரம் இருக்க வேண்டும். அப்போதுதான், அரசின் திட்டங்கள் முழுமையாக சென்றடையும். குறைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும். மாவட்ட நிர்வாக கவனத்துக்கு செல்லாமல், பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு எட்டப்படாமல் உள்ளது.எனவே, பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலை மற்றும் மடத்துக்குளத்தை சேர்த்து மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது, பொள்ளாச்சி மக்களின் நீண்ட கால கனவாக உள்ளது.கடந்த, பத்து ஆண்டுகாலமாக அ.தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் பொள்ளாச்சி மாவட்டம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து, மக்கள் ஏமாற்றமடைந்தனர்.இந்நிலையில் சட்டசபை தேர்தலில், பெரும்பாலான கட்சிகள் சார்பில், பொள்ளாச்சி மாவட்டம் என்ற வாக்குறுதி இடம்பெற்றது. தற்போது, தி.மு.க., தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள சூழலில், பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர்.எகிறும் எதிர்பார்ப்புதமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும், 21ம் தேதி துவங்கப்படுகிறது. இந்த கூட்டத்தொடரில், பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும், என்ற நீண்ட கால கனவை நிறைவேற்றிட, அரசு அறிவிப்பு வெளியிடுமா என பொள்ளாச்சி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X