சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்தும், விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடந்தது.கோவை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், 42 பங்குகள் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட பங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை ரோட்டில் உள்ள
 பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்தும், விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடந்தது.கோவை தெற்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில், 42 பங்குகள் முன்பு காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், 20க்கும் மேற்பட்ட பங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பங்கின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட தலைவர் பகவதி தலைமை வகித்தார்.விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாட்டு வண்டியை நிறுத்தி கோஷம் எழுப்பினர்.மாநில துணைத்தலைவர் செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் கவிதா, நகர பொறுப்பாளர் பஞ்சலிங்கம், மாசிலாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.கிணத்துக்கடவு கிணத்துக்கடவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வட்டார காங்கிரஸ் தலைவர் வித்யாசாகர் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், நகர தலைவர் செந்தில்குமார் விவசாய அணி தலைவர் ரத்தினசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.உடுமலைபெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து, உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் கிட்டுச்சாமி, லோகநாதன் மற்றும் மாவட்ட, வட்டார, கிளைக்கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். -நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X