பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை பெருமாள் கரடு அருகே 86 ஏக்கர் வன நிலமாக அறிவிப்பு:வனத்துறையினர் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை பெருமாள்சாமி கரடு மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதியில், 86 ஏக்கர் பரப்பு, வன நிலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அத்துமீறல்கள் தடுக்கப்பட்டு வன உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதால், வனத்துறையினர், சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆனைமலை - பெரியபோது செல்லும் வழியில், பெருமாள்சுவாமி கரடு மலைக்கோவில் உள்ளது. கோவிலைச் சுற்றி வருவாய்த்துறை
  ஆனைமலை பெருமாள் கரடு அருகே 86 ஏக்கர் வன நிலமாக அறிவிப்பு:வனத்துறையினர் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி!

ஆனைமலை:ஆனைமலை பெருமாள்சாமி கரடு மலைக்கோவிலை சுற்றியுள்ள பகுதியில், 86 ஏக்கர் பரப்பு, வன நிலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அத்துமீறல்கள் தடுக்கப்பட்டு வன உயிரினங்கள் பாதுகாக்கப்படும் என்பதால், வனத்துறையினர், சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆனைமலை - பெரியபோது செல்லும் வழியில், பெருமாள்சுவாமி கரடு மலைக்கோவில் உள்ளது. கோவிலைச் சுற்றி வருவாய்த்துறை கட்டுப்பாட்டில், 746 ஏக்கர் பரப்பளவுக்கு வனப்பகுதி உள்ளது. வனத்துறையினர் மலையை சுற்றிய பகுதியை கண்காணித்து வருகின்றனர்.இந்த வனப்பகுதியில், மஞ்சள் கொன்றை, பரம்பை, கருவேலன், கொடிவேலன் உள்பட பலவகை மரங்கள், வனவிலங்குகள் விரும்பியுண்ணும் தாவரங்கள் உள்ளன. மேலும், சிறுத்தை, புலி, கடமான், காட்டுப்பன்றி உள்பட பல விலங்குகள், அரிய வகை பறவைகள் உள்ளன.வனத்துறையின் போத்தமடை பீட் காப்புக்காடு பகுதியிலிருந்து, 400 மீட்டர் தொலைவில் மலைக்கோவில் உள்ளது. ஐந்து ஆண்டுக்கு முன்பு இப்பகுதியில் மயிலைப் பிடிக்க சென்ற சிறுத்தை ஒன்று இறந்தது. இதனால், இப்பகுதியில் சிறுத்தை நடமாடும் அளவுக்கு வனம் ஆரோக்கியமாக இருப்பது உறுதியானது.அத்துமீறல்பெருமாள் கரடு மலைக்கோவிலைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில், குவாரி அமைப்பது, விவசாயம் செய்வது, வனவிலங்குகளை வேட்டையாடுவது உள்பட பல்வேறு அத்துமீறல்கள் கடந்த காலங்களில் அரங்கேறின. இன்னமும் பல்வேறு அத்துமீறல்கள் தொடர்கின்றன.கோவில் அருகிலுள்ள நிலம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்ததாலும், வனநிலமாக இல்லாததாலும் இப்பகுதிகளில், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறைக்கு பல்வேறு தடைகள் இருந்தன.வன விலங்குகள் மற்றும் மரங்களை காப்பதற்காக, இப்பகுதியின் நிலைகுறித்து முழுமையான அறிக்கை தயாரித்து, கோவிலைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட பரப்பை வனத்துறையிடம் ஒப்படைக்கும்படி, மூன்று ஆண்டுக்கு முன்பு வனத்துறையினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில், பலமுறை படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.நிறைவேறிய கோரிக்கைஇந்நிலையில், கோவை மாவட்ட கலெக்டர், பெருமாள் கரடைச் சுற்றியுள்ள 86 ஏக்கர் நிலப்பரப்பை வன நிலமாக அறிவித்துள்ளார். இதனால், வனத்துறையினர் மற்றும் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்தி கூறியதாவது:ஆனைமலை பெருமாள்சுவாமி கரடு மலைக்கோவில் சுற்றுப்பகுதியை, காப்புக்காடாக அறிவிக்க வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்ததில், முதற்கட்டமாக தற்போது, 'ரிசர்வ் லேண்டு' எனப்படும், 'ஒதுக்கு நிலமாக' பாதுகாக்கப்பட்ட வன நிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், காப்புக்காடு பகுதிகளில் அமலில் உள்ள பெரும்பாலான கட்டுப்பாடுகள் இங்கும் அமல்படுத்தப்படும். வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு, அத்துமீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மலைக்கோவில் செல்லும் பக்தர்களின் உரிமை பறிக்கப்படாது; பக்தர்கள் கோவிலுக்கு வனத்துறையினர் அறிவுரைப்படி சென்று வரலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.பொள்ளாச்சியிலும் ஒதுக்கு நிலம்பொள்ளாச்சி மரக்கிடங்கு வளாகம், 6.30 ஏக்கர், ஜமீன் ஊத்துக்குளி குடியிருப்பு 5 ஏக்கர், ஆகிய பகுதிகள், வனச்சட்டம், 1882 பிரிவு 26ன் கீழ் ஒதுக்கு நிலமாக மாற்றப்பட்டுள்ளன.இந்த ஒதுக்கு நிலத்தை, காப்பு காடாக மாற்ற தமிழக அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட ஆனைமலை பண்ணை, சேத்துமடை பகுதிகளையும் ஒதுக்கு நிலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.வால்பாறை தாலுகாவுக்கு உட்பட்ட, 352 ஏக்கர் பரப்பு, ஏற்கெனவே ஒதுக்கு நிலமாக மாற்றி ஆணை பெறப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X