பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கால மன உளைச்சல் இலவச ஆலோசனை பெறலாம்!

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா தொடர்பான மன உளைச்சலை போக்கும் வகையில் 'பீனிக்ஸ் ஸ்குவாட்' என்ற அமைப்பு, மொபைல் போன் வழியாக மன நல ஆலோசனையை வழங்குகிறது.கொரோனா பாதிப்பு குறித்த வதந்திகளால் பலர் மன தைரியத்தை இழந்து விடுகின்றனர். பலர் அதீத பயத்தால் பாதிக்கப்படுகின்றனர். பலர் குடும்பத்தை நினைத்தும், தங்களின் எதிர்காலத்தை நினைத்தும் கவலைப்படுகின்றனர். பலரும் தன்னம்பிக்கை இழந்து, ரத்த
 கொரோனா கால மன உளைச்சல் இலவச ஆலோசனை பெறலாம்!

சென்னை:கொரோனா தொடர்பான மன உளைச்சலை போக்கும் வகையில் 'பீனிக்ஸ் ஸ்குவாட்' என்ற அமைப்பு, மொபைல் போன் வழியாக மன நல ஆலோசனையை வழங்குகிறது.

கொரோனா பாதிப்பு குறித்த வதந்திகளால் பலர் மன தைரியத்தை இழந்து விடுகின்றனர். பலர் அதீத பயத்தால் பாதிக்கப்படுகின்றனர். பலர் குடும்பத்தை நினைத்தும், தங்களின் எதிர்காலத்தை நினைத்தும் கவலைப்படுகின்றனர். பலரும் தன்னம்பிக்கை இழந்து, ரத்த அழுத்தம், துாக்கமின்மை உள்ளிட்ட புதிய பிரச்னைகளுக்கு ஆளாகி தங்களின் உடல்நலனை சிக்கலாக்கிக் கொள்கின்றனர்.

அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியுடன் மீண்டு வருவதற்கான வழிகள் குறித்து, 'பீனிக்ஸ் ஸ்குவாட்' என்ற மன நல ஆலோசனை குழுவினர், மொபைல் போன் வழியாக ஆலோசனை வழங்கி உள்ளனர்.இந்த அமைப்பினர், நேற்று முன்தினம் 'வாங்க பேசலாம் - 2.0' என்ற தலைப்பில் இந்த சேவையை துவக்கினர்.

இந்த சேவையை பெற, தினமும் காலை 7:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை 98404 87762; பிற்பகல் 2:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை 73389 05946 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X