கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை மேம்படுத்த ஐகோர்ட் யோசனை

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை : அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவுக்கான காரணங்கள், அதை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க நிபுணர்கள் குழுவை அமைக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான சம்பளம் நிர்ணயிக்க, இடைநிலை கல்வி ஆசிரியராக பணியாற்றிய நாட்களை கணக்கில் கொள்ள மறுத்ததை எதிர்த்து, உயர்
அரசு பள்ளிகள் , கல்வி தரம்,ஐகோர்ட் யோசனை

சென்னை : அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவுக்கான காரணங்கள், அதை சரிசெய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்க நிபுணர்கள் குழுவை அமைக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியருக்கான சம்பளம் நிர்ணயிக்க, இடைநிலை கல்வி ஆசிரியராக பணியாற்றிய நாட்களை கணக்கில் கொள்ள மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள், நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வில், விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில் பதில் அளிக்க வழக்கறிஞர் நீலகண்டன், 'நோட்டீஸ்' பெற்று கொண்டார்.

இவ்வழக்கில், நீதிபதிகள் பிறப்பித்த, இடைக்கால உத்தரவு:தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு என்பதால், அரசு பள்ளிகளில் படிக்கும், குறிப்பாக கிராமப்புற மாணவர்களின் நிலையை ஆராய வேண்டியதுள்ளது. அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதியின்மை, குறைவான கல்வி தரத்தால், மாணவர்கள் சேர்க்கை குறைகிறது.
குறைவான கல்வி தரத்தால், அரசு பள்ளி மாணவர்களால், மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பெற முடியவில்லை. மருத்துவப் படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்க வேண்டிய கட்டாயம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

உயர் கல்வி மையமாக தமிழகம் திகழ்ந்தாலும், பள்ளி கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளிகளில் தரம் குறைந்தாக உள்ளது. ஐந்தாம் வகுப்பு மாணவனால் தனது பெயரை எழுத தெரியவில்லை. அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. குறைவான மாணவர்கள் உள்ளனர். அனைத்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் எடுக்கிறார்.


பள்ளி கல்வியில் ஏதோ தவறு உள்ளது. அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். விளிம்புநிலை மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் தான், அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, தரமான கல்வி வழங்க வேண்டும்.
தேவையான உள்கட்டமைப்பை வழங்கி, தகுதியான ஆசிரியர்களை நியமித்து, கல்வி தரத்தை உயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களையும் கண்காணிக்க வேண்டும். அப்போது தான், மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்கும்.
எனவே, அரசு பள்ளிகளில் கல்வித் தரம் குறைவுக்கான காரணங்களை ஆராய்ந்து, அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க, கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவை, அரசு அமைக்கும் என, நம்புகிறோம் அல்லது கல்வி தரத்தை உயர்த்த, அரசே எந்த நடவடிக்கை மேற்கொள்ளலாம்.


அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறை, சுற்றுச்சுவர் வசதி அளிக்கும்படி, ஐந்து ஆண்டுகளுக்கு முன், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தும், அதை அமல்படுத்தவில்லை. அதுகுறித்து, அரசு தரப்பில் அறிக்கை அளிக்க வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில், அரசு பள்ளிகளை, அருகில் இயங்கும் தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொள்வதாக, மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்தார்.
அதேபோல், அரசு பள்ளிகளை தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்துக் கொண்டால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வி தரத்தை உயர்த்தவும் முடியும்.
கல்வி தரத்தை உயர்த்த, முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, அரசு வழக்கறிஞர் நீலகண்டனும் தெரிவித்துள்ளார்.

எனவே, நீதிமன்றம் பரிந்துரைத்தபடி, நிபுணர் குழுவை அமைப்பது அல்லது அரசு தரப்பில் வேறு நடவடிக்கை ஏதும் இருந்தால், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். விசாரணை, ஆக.,2க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkateswaran Rajaram - Dindigul,இந்தியா
12-ஜூன்-202120:26:17 IST Report Abuse
Venkateswaran Rajaram அரசே தரம் இல்லாதபோது எப்படி ....அனைத்திலும் தரம் இருக்கவேண்டும் அதாவது சாலை,கட்டிடங்கள் , ட்ரைனேஜ் என அனைத்திலும் ...ஆனால் இவர்கள் திட்டம் போடுவதே கொள்ளை அடிக்கத்தான் ...கைநீட்டி பணம் வாங்கி ஒட்டு போட்டால் இப்படித்தான்
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
12-ஜூன்-202118:28:22 IST Report Abuse
அசோக்ராஜ் கோர்ட்டுகளின் தரத்தை மேம்படுத்த ஆரு ஓசனை சொல்லணும்னு எசமானுங்க காத்துக்கிட்டு இருக்கீங்க? ஒரு பொது கருத்து கேட்பு நடத்திப் பாருங்களேன். கொஞ்சூண்டு தில் வேணும். அவ்ளோதான்.
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
12-ஜூன்-202118:18:42 IST Report Abuse
Mirthika Sathiamoorthi நான் இப்படி பாக்குறேன். அரசு நடத்தும் கல்வி நிறுவங்களில் தரம் குறைவு...அப்புறம் என்ன மண்ணாகட்டிக்கு அரசு நடத்தும் பொறியியல் கல்லூரியிலும் அரசு நடத்தும் மருத்துவக்கல்லூரிக்கும சேர அடிச்சுக்குறோம்...? தரமான தனியார் கல்லூரியில் சேருவதுதானே நியாயம்? தரமில்ல அரசு நடத்தும் நிறுவனங்களில் சேரவா லட்சக்கணக்கில் செலவு பண்ணி கோச்சிங் சென்டர் போறோம்? மாநிலத்தில் முதல்மாணவ மாணவி தரமான தனியார் பள்ளியில் படித்தாலும் கூட? அப்போ உண்மையிலே தரம்ன்னா என்ன? ஒரு மாணவனுக்கு அவனது வாழ்க்கை சூழலிருந்து கற்றுக்கொடுக்கும் பாடம் மாநில பாடத்திட்டம். தனியார் பள்ளி மாணவனுக்கு படிப்பது தவிர வேறு அழுத்தம் இல்லை..ஆனால் கிராமப்புற ஏழை மாணவனுக்கு பசி வறுமை குடும்பம் சூழல் எனும் பல தடைக்கற்கள்.. இதெல்லாம் கடந்து கல்வியும் அழுத்தமாகி பள்ளிக்கே வராமல் போக கூடாது என்பதற்கான எளிய பாடம் சத்துணவு.. இது உங்களுக்கு தரமில்லை.. ஒரு வாதத்துக்கு எனது குழந்தை அரசுப்பள்ளியில் சேர்த்தேன் என வைத்துக் கொண்டால் அவனுக்கு என்னமாதிரியான வசதிகள் நான் அமைத்துக்கொடுப்பேன்? தனி ரூம் லேப்டாப் இணையம் வாசிக்க பத்திரிக்கைகள் பாடப்புத்தகம் அல்லா பல புத்தகங்கள் பொது அறிவை வளர்க்க, தனித்திறமை வளர்க்க தேவையான பொருட்கள் இப்போ என்பிள்ளையுடன் படிக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் பிள்ளையும், யார் அரசு தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பர்? இதிலிருந்து இங்கே தேர்வில் பாஸாவதே தரம்ன்னு மனசில பதியவச்சிட்டு மனஅழுத்தத்துடன் பயிலும் கல்வியை தரம்ன்னு சொல்றோம்மா? தேர்வு ஒரு மதிப்பீடு மட்டுமே .. எந்த பாடத்தில் சிறப இருக்கே எதில் நீ கவனம் செலுத்த வேண்டும்ன்னு மாணவனுக்கு உணர்த்துவது மட்டுமே தேர்வு.. மதிப்பெண் குறைவாய் இருப்பவனை மேலும் சிறப்பான சொல்லிக் கொடுத்தல் எளிமையாய் பாடங்களை புரியவைத்தல் மூலம் அவனையும் எல்லாம் கற்றுதேற வைப்பதை விட்டுவிட்டு அவனை தகுதி இல்லாதவனாக படிப்பை பாதியிலே கைவிட வைக்கும் இந்த முறையா தரமான முறை? தேர்வில் தோல்வி ஏற்பட்டு மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்பவன் அரசுப்பள்ளி மாணவர்கள? தனியார் பள்ளி மாணவர்கள? எங்கே மன தைரியத்தை ஊட்டும் கல்வி இருக்கு? தனியார் பள்ளிகளா? அரசுப்பள்ளிகளா? அப்போ எங்கே தரமான கல்வி இருக்கு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X