பொது செய்தி

தமிழ்நாடு

'சரக்கு' சரியா இருக்கா? தணிக்கைக்கு கோரிக்கை!

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:'மூடப்பட்ட நாளில் செய்த தணிக்கையின்படி, மது வகைகள் சரியாக இருக்கின்றனவா என, சரி பார்த்தபின், மதுக்கடைகளை திறக்க வேண்டும்' என, தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து அந்த சங்க தலைவர் பெரியசாமி, பொதுச் செயலர் தனசேகரன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:கொரோனா தொற்று பரவலை தடுக்க, மே 10 முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

சென்னை:'மூடப்பட்ட நாளில் செய்த தணிக்கையின்படி, மது வகைகள் சரியாக இருக்கின்றனவா என, சரி பார்த்தபின், மதுக்கடைகளை திறக்க வேண்டும்' என, தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்கம், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சங்க தலைவர் பெரியசாமி, பொதுச் செயலர் தனசேகரன், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:கொரோனா தொற்று பரவலை தடுக்க, மே 10 முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த காலத்தில், மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள், சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்கப்பட்டதாக, பல புகார்கள் வந்துள்ளன.

இந்த குற்றங்களை பணியாளர்கள் மீது சுமத்தி, உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. எனவே, மதுக்கடைகளை திறக்கும் முன், மூடப்பட்ட நாளில் தணிக்கை செய்யப்பட்டபடி, மது வகைகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சரிபார்த்த பின், கடைகள் திறக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பால் மரணமடைந்த பணியாளர் குடும்பங்களில், தலா ஒருவருக்கு, அரசின் பிற துறைகளில், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X