மரவள்ளி கிழங்கு விலை சரிவு: கேரளாவுக்கு செல்வதில் சிக்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இச்சாகுபடிக்கு தேவையான கரணைகளை, கேரளாவில் இருந்து, விலைக்கு வாங்கி வந்து நடவு செய்கின்றனர். சாகுபடியில், மரவள்ளி கிழங்குகள் அறுவடைக்கு, 10 மாதங்களாகிறது.இவ்வாறு, நீண்ட கால பரமாரிப்பு தேவைப்படும் சாகுபடியில், பருவநிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு, 15 டன் வரை
 மரவள்ளி கிழங்கு விலை சரிவு: கேரளாவுக்கு செல்வதில் சிக்கல்

உடுமலை:உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, பரவலாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்படுகிறது. இச்சாகுபடிக்கு தேவையான கரணைகளை, கேரளாவில் இருந்து, விலைக்கு வாங்கி வந்து நடவு செய்கின்றனர். சாகுபடியில், மரவள்ளி கிழங்குகள் அறுவடைக்கு, 10 மாதங்களாகிறது.இவ்வாறு, நீண்ட கால பரமாரிப்பு தேவைப்படும் சாகுபடியில், பருவநிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு, 15 டன் வரை விளைச்சல் கிடைக்கும். சராசரியாக கிலோவுக்கு, 12 முதல் 15 ரூபாய் வரை விலை கிடைக்கும்.இதனால், ஏக்கருக்கு, 6,000 ரூபாய் வரை இடுபொருட்கள் ஆகியவற்றுக்காக செலவிட்டு, இச்சாகுபடியை உடுமலை பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சீசனில், ராகல்பாவி, முக்கோணம், கொங்கல்நகரம் உட்பட பல இடங்களில், மரவள்ளி கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.ஆனால், அறுவடை துவங்கியதும், மரவள்ளி கிழங்கு விலை கிலோ, 5 ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.மரவள்ளி கிழங்குக்கு, கேரளா முக்கிய விற்பனை சந்தையாக உள்ளது. அங்கு, சிப்ஸ் மற்றும் உணவு தயாரிப்பில், மரவள்ளி கிழங்கு முக்கிய இடம் பிடிக்கிறது.இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், கேரளா வியாபாரிகள் யாரும் மரவள்ளி கிழங்கு கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால், கிழங்கு விற்பனை செய்ய முடியாமல், குறைந்த விலை கிடைத்தால் கூட போதுமானாது என்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளது.முக்கோணம் விவசாயி மெய்ஞானகுமார் கூறியதாவது: உடுமலை பகுதியில், சாகுபடியாகும், மரவள்ளிக்கிழங்கு, கேரளாவில் உணவு பொருட்கள் தயாரிப்பில், அதிகம் பயன்படுத்தப்படுகிறது.ஈரோடு உட்பட பகுதிகளில், ஸ்டார்ச் தயாரிப்புக்காக, பிரத்யேக ரகங்களை சாகுபடி செய்கின்றனர். இங்கு விளையும், கிழங்கில், மாவுச்சத்து போதுமான அளவு இருப்பதால், விலையும் கிடைத்து வந்தது.நடப்பு சீசனில், கேரளா வர்த்தகம் முடங்கி, பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, பிற மாவட்ட தேவைக்காக, வியாபாரிகள் குறைந்த விலைக்கு மரவள்ளி கிழங்கை, கொள்முதல் செய்து செல்கின்றனர்.இவ்வாறு, விவசாயி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X