அரசியல் செய்தி

தமிழ்நாடு

17ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஸ்டாலின்

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (62)
Share
Advertisement
முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக டில்லி செல்லும் ஸ்டாலின், வரும் 17ம் தேதி பிரதமரை சந்திக்க உள்ளார்.தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். உடனடியாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பிரதமரை சந்திக்க செல்லவில்லை.தற்போது, கொரோனா நோய் பரவல் தினமும் படிப்படியாக குறைந்து வருகிறது.
17ல் பிரதமர் மோடி, ஸ்டாலின்

முதல்வராக பொறுப்பேற்ற பின், முதன் முறையாக டில்லி செல்லும் ஸ்டாலின், வரும் 17ம் தேதி பிரதமரை சந்திக்க உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். உடனடியாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பிரதமரை சந்திக்க செல்லவில்லை.தற்போது, கொரோனா நோய் பரவல் தினமும் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பிரதமரை சந்திப்பதற்காக 16ம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்கிறார். இரவு அங்கு தங்குகிறார்.


latest tamil newsமறுநாள் காலை 10:30 மணிக்கு, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழகத்தின் தேவைகள் தொடர்பாக 35 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.
பிரதமர் உடனான சந்திப்பு முடிந்த பின், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
டில்லியில் கட்டப்படும் தி.மு.க., அலுவலகத்தை பார்வையிடவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. - புதுடில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
12-ஜூன்-202114:39:25 IST Report Abuse
Vena Suna கோரிக்கைகள் கேட்க அழைக்க வில்லை. என்ன செய்துளீர்கள் கொரோனாவை ஒழிக்க எனக் கேட்க தான் .
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
12-ஜூன்-202114:34:06 IST Report Abuse
Sridhar 2G தீர்ப்பு எப்போ வரும்? கோர்ட்ஏ suo motto என்று சொல்வார்களே அதன்படி இப்போதுள்ள குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களையும் தாண்டி அதற்க்கு பின்னால் நின்றவர்களுயும் இந்த கேஸினுள் கொண்டுவந்து மொத்தமாக ஒரு பெரிய தண்டனை வழங்கவேண்டும். அது குன்ஹாவின் வெடிகுண்டைவிட தீவிரமான அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும். தமிழகம் சீர் பட அது ஒன்றுதான் வழி.
Rate this:
Cancel
வணங்காமுடி திராவிடன் - அஞ்சாமை திராவிடர் உடமையடா ,இந்தியா
12-ஜூன்-202114:06:34 IST Report Abuse
வணங்காமுடி திராவிடன் உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்பதுதான் கலைஞரின் கொள்கை. அந்த வழியில் ஸ்டாலினும் முதல்வராக பதவியேற்ற பின் ஒரு மாநில முதல்வர் இந்திய நாட்டின் பிரதமரை சந்திப்பது ஒரு தார்மீக நெறி என்பதை உணர்ந்து பிரதமரை சந்திக்க போகிறார். மாநில உரிமைகளை விட்டு கொடுக்காமல் நீண்ட நாட்களாக மாநிலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு இந்த சந்திப்பில் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
blocked user - blocked,மயோட்
12-ஜூன்-202119:03:51 IST Report Abuse
blocked user"உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் " - திருடுறதுக்கு ஒரு அளவே இல்லையா? அதுவும் எம் ஜி ஆரது வசனம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X