பொது செய்தி

தமிழ்நாடு

உயிர் காக்கும் பணியில் டாக்டர்கள்: இருப்பிட வசதி அவசியம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலையில், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்களை மனித நேயமின்றி காலி செய்த செயல் அரங்கேறியுள்ளது.உடுமலை பகுதிகளில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கிராமங்களிலும் அதிகளவு பரவிய நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர்.தொற்று பாதிப்பு குறைந்தாலும், தற்போதும், 94 பேர் வரை சிகிச்சை பெற்று

உடுமலை:உடுமலையில், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்களை மனித நேயமின்றி காலி செய்த செயல் அரங்கேறியுள்ளது.உடுமலை பகுதிகளில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கிராமங்களிலும் அதிகளவு பரவிய நிலையில், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு வருகின்றனர்.தொற்று பாதிப்பு குறைந்தாலும், தற்போதும், 94 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அரசு சார்பில், விடுதிகள் ஏற்பாடு செய்து தரப்படுகிறது.போடிபட்டி பகுதியில், தனியாக உள்ள ஒரு வீடு ஏற்பாடு செய்த நிலையில், கொரோனா பணியில் உள்ளவர்கள் என்பதற்காக, மனித நேயம் இல்லாமல், துாரத்தில் வசிப்பவர்கள், உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்து காலி செய்ய வைத்துள்ளனர்.இதனால், வசதியே இல்லாத திருமண மண்டபத்தில் தற்போது தங்கி, மருத்துவ சேவை புரிந்து வருகின்றனர்.பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து, மக்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.தனியார் நிறுவனங்கள், லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் சேவை அமைப்புகள், மக்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X