பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் நிவாரணம்: கூட்டத்தால் தொற்று அபாயம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:கொரோனா தொற்று மீண்டும் தலைதுாக்க விடாதபடி, சரியான திட்டமிடலுடன், ரேஷன் கடை டோக்கன் வழங்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஊரடங்கு துவங்கிய போது, தமிழக அரசு, 2,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கியது. இம்மாதம், இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாயும், மளிகை பொருள் தொகுப்பும் வழங்குகிறது. இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. வரும், 15ம் தேதி முதல், 2,000 ரூபாயும், மளிகை பொருள்

உடுமலை:கொரோனா தொற்று மீண்டும் தலைதுாக்க விடாதபடி, சரியான திட்டமிடலுடன், ரேஷன் கடை டோக்கன் வழங்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஊரடங்கு துவங்கிய போது, தமிழக அரசு, 2,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கியது. இம்மாதம், இரண்டாவது தவணையாக, 2,000 ரூபாயும், மளிகை பொருள் தொகுப்பும் வழங்குகிறது. இதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. வரும், 15ம் தேதி முதல், 2,000 ரூபாயும், மளிகை பொருள் தொகுப்பும் வழங்கப்பட உள்ளது. கடந்த முறை, 'டோக்கன்' வழங்கிய போது, 100 பேருக்கு ஒரு மணி நேரம் என்ற வகையில், மொத்தமாக 'டோக்கன்' வழங்கியிருந்தனர்.இதனால், ஒவ்வொரு கடை முன்பாகவும், 100க்கும் மேற்பட்டோர் கூடினர். 'டோக்கன்' பெற்ற அனைவரும், நேரத்தை பின்பற்றாமல், ஒரே நேரத்தில் ஆஜராகிவிட்டனர். எனவே, இரண்டாவது தவணை மற்றும் மளிகை பொருட்கள் வழங்க, புதிய முறையில் டோக்கன் வழங்க வேண்டும். அதாவது, கார்டுதாரர்களை, 25 பேர் கொண்ட குழுக்களாக பிரித்து, அரை மணி நேரம் ஒதுக்க வேண்டும்.ஒரு குழுவுக்கு வழங்கிய பின்னரே, அடுத்த குழு கடையின் முன் வர வேண்டுமென கண்டிப்புடன் தெரிவிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், மீண்டும் கூட்டம் சேர அனுமதிக்க கூடாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X