14 முதல் சிட்டி சிவில் கோர்ட்டில் காணொலி வாயிலாக விசாரணை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

14 முதல் சிட்டி சிவில் கோர்ட்டில் காணொலி வாயிலாக விசாரணை

Added : ஜூன் 11, 2021
Share
சென்னை:சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வரும், 14ம் தேதி முதல், சிவில் வழக்குகளின் விசாரணைகள் அனைத்தும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர வழக்குகள்சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சிவில் வழக்குகள் தொடர்பான, அவசர வழக்குகள் அனைத்தும், நேரடியாக மனு தாக்கல்
 14 முதல் சிட்டி சிவில் கோர்ட்டில் காணொலி வாயிலாக விசாரணை

சென்னை:சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வரும், 14ம் தேதி முதல், சிவில் வழக்குகளின் விசாரணைகள் அனைத்தும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அவசர வழக்குகள்

சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.செல்வகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சிவில் வழக்குகள் தொடர்பான, அவசர வழக்குகள் அனைத்தும், நேரடியாக மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:30 மணி முதல், மாலை 3:30 மணி வரை, உயர் நீதிமன்ற எஸ்பிளனேடு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போட வேண்டும்.

அவசர சிவில் வழக்குகள், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரிக்கப்படும். 'மெமோ' தாக்கல்நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக, இருதரப்பினரும் இணைந்து, 'மெமோ' தாக்கல் செய்தால், அவையும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரிக்கப்படும்.வழக்கு விசாரணை பட்டியல், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக தெரிவிக்கப்படும்.

முதன்மை நீதிமன்றத்தில் ஜாமின் கோரும் மனுக்களை, காலை 10:30 மணி முதல் பகல் 1:30 மணி வரை பெட்டியில் போடலாம். அவையும் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக விசாரிக்கப் படும்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அவசர தேவையின்றி, நீதிமன்ற வளாகத்திற்குள் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் நுழைய வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X