நிழற்கூரை பணிகள் நிறுத்தம்: எஸ்டேட் பயணிகள் தவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வால்பாறை:பயணிகள் நிழற்கூரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், நல்லகாத்து எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையிலிருந்து சோலையாறு வழியாக, நல்லகாத்து செல்லும் ரோட்டில், நகராட்சி சார்பில் பழைய பயணிகள் நிழற்கூரையை இடித்து, புதியதாக நிழற்கூரை கட்டும் பணி நடக்கிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இப்பணி, பாதியிலேயே
 நிழற்கூரை பணிகள் நிறுத்தம்: எஸ்டேட் பயணிகள் தவிப்பு

வால்பாறை:பயணிகள் நிழற்கூரை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால், நல்லகாத்து எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறையிலிருந்து சோலையாறு வழியாக, நல்லகாத்து செல்லும் ரோட்டில், நகராட்சி சார்பில் பழைய பயணிகள் நிழற்கூரையை இடித்து, புதியதாக நிழற்கூரை கட்டும் பணி நடக்கிறது.கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இப்பணி, பாதியிலேயே நிறுத்தப்பட்டு விட்டது. இதுகுறித்து நல்லகாத்து எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி சார்பில் செய்யப்படும் வளர்ச்சி பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பயணிகள் நிழற்கூரை கட்டும் பணி திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்கும் நிலையில், பயணிகள் நிற்க இடமில்லாமல் தவிக்கும் சூழல் ஏற்படும். எனவே, மக்களின் நலன் கருதி, விரைவிலேேய, நிழற்கூரை பணிகளை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X