மீண்டும் திரிணமுல் திரும்பினார் முகுல் ராய் : மம்தாவுக்கு 'ஐஸ்'

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (13+ 36)
Share
Advertisement
கோல்கட்டா ;திரிணமுல் காங்கிரசிலிருந்து ஓட்டம் பிடித்து, பா.ஜ.,வில் இணைந்த முகுல் ராய், நேற்று மீண்டும் முதல்வர் மம்தா முன்னிலையில் திரிணமுல் காங்கிரசிலேயே இணைந்தார். ''இந்தியாவின் ஒரே தலைவர்,'' என, மம்தாவை அவர் பாராட்டி தள்ளினார்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. திரிணமுல் கட்சியை மம்தா துவக்கியபோதே, அதில்
மீண்டும் திரிணமுல் , முகுல் ராய் ,மம்தா , 'ஐஸ்'

கோல்கட்டா ;திரிணமுல் காங்கிரசிலிருந்து ஓட்டம் பிடித்து, பா.ஜ.,வில் இணைந்த முகுல் ராய், நேற்று மீண்டும் முதல்வர் மம்தா முன்னிலையில் திரிணமுல் காங்கிரசிலேயே இணைந்தார். ''இந்தியாவின் ஒரே தலைவர்,'' என, மம்தாவை அவர் பாராட்டி தள்ளினார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. திரிணமுல் கட்சியை மம்தா துவக்கியபோதே, அதில் இணைந்தவர் முகுல் ராய். மம்தாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த முகுல் ராய், கட்சியில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தார்.மத்தியில், 2009ல் பதவியேற்ற காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில், ரயில்வே அமைச்சராக மம்தாவும், கப்பல் துறை இணை அமைச்சராக முகுல் ராயும் பதவியேற்றனர்.

மேற்கு வங்க முதல்வராக, 2011ல் மம்தா பதவியேற்றதையடுத்து, ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின் மம்தா வலியுறுத்தியதை அடுத்து, ரயில்வே அமைச்சர் பதவியை முகுல் ராய்க்கு, அப்போதைய பிரதமர் மன்மோகன் வழங்கினார். மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி, நாரதா ஊழல் ஆகியவற்றில் முகுல் ராயின் பெயர் அடிபட்டது.


கருத்து வேறுபாடுஇதையடுத்து மம்தாவுக்கும், முகுல் ராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, 2017 ல் திரிணமுல் கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு முகுல் ராய், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். கட்சியிலிருந்து விலகிய முகுல் ராய், ராஜ்யசபா எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, பா.ஜ.,வில் இணைந்தார். பிரதமர் மோடி தலைமையில் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்த முகுல் ராய், கடந்த லோக்சபா தேர்தலில், மேற்கு வங்கத்தில், பா.ஜ., 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதில் பெரும் பங்கு வகித்தார்.கட்சியின் தேசிய தலைவராக நட்டா பொறுப்பேற்ற பின், கட்சியின் தேசிய துணைத் தலைவர்களில் ஒருவராக, முகுல் ராய் நியமிக்கப்பட்டார்.மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், வடக்கு கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் பா.ஜ., வெற்றி பெற்றால், முதல்வராக முகுல் ராய் பதவியேற்கலாம் என, தேர்தல் பிரசாரத்தில் கூறப்பட்டது. ஆனால் சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., அமோக வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வராக மம்தா பதவியேற்றார்.


கடும் அதிருப்திதேர்தலில் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரிக்கு, பா.ஜ.,வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, முகுல் ராய்க்கு அதிருப்தி ஏற்படுத்தியது. மேலும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி சுவேந்து அதிகாரிக்கு வழங்கப்பட்டதில், ராய் கடும் அதிருப்தியடைந்தார். இதனால், தேர்தல் முடிவுகளுக்குப் பின் அமைதி காத்தார். கோல்கட்டாவில் சமீபத்தில் நடந்த, பா.ஜ., கூட்டத்தில், அவர் பங்கேற்கவில்லை. இதனால் அவர், திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கோல்கட்டாவில் உள்ள திரிணமுல் அலுவலகத்திற்கு, முகுல் ராய், தன் மகன் சுபான்ஷு ராயுடன் நேற்று வந்தார். முதல்வர் மம்தா முன்னிலையில், அவரும், அவரது மகனும் திரிணமுல் கட்சியில் மீண்டும் இணைந்தனர்.


மகிழ்ச்சிஇதுகுறித்து முதல்வர் மம்தா கூறியதாவது:பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சியான ஒன்று. பா.ஜ.,வில் சொல்ல முடியாத சித்ரவதைகளை அவர் அனுபவித்தார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. யாரையும் நிம்மதியாக, அமைதியாக பா.ஜ., வாழ விடாது என்பதற்கு திரிணமுல் கட்சிக்கு முகுல் ராய் திரும்பியதே சரியான உதாரணம். கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் சேர்த்து கொள்வது பற்றி பரிசீலிப்போம். எனினும் தேர்தலுக்கு சில மாதத்துக்கு முன், பா.ஜ.,வில் சேர்ந்தவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து முகுல் ராய் கூறியதாவது:பழைய நண்பர்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னால், பா.ஜ.,வில் இருக்க முடியாது. மம்தாவுடன் எப்போதுமே எனக்கு எந்த முரண்பாடும் இருந்ததில்லை. இந்தியாவின் ஒரே தலைவர் மம்தா மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.


பவார் - கிஷோர் சந்திப்புதமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஒரு பேட்டி அளித்து
இருந்தார். அதில், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கும் பணியிலிருந்து விலகப் போவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, பிரசாந்த் கிஷோர் நேற்று சந்தித்து பேசினார். வரும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக வலிமையான கூட்டணி அமைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.


எந்த பாதிப்பும் இல்லை!முகுல் ராய் சேர்ந்ததால், மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இப்போது அவர் விலகியுள்ளதால், கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. திலீப் கோஷ்
மேற்கு வங்க பா.ஜ., தலைவர்

Advertisement
வாசகர் கருத்து (13+ 36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
12-ஜூன்-202117:17:27 IST Report Abuse
jagan IT கம்பெனி ஊழியர் மட்டும் அதிக சம்பளம் எண்டு கம்பெனி மாறலாம், இவுங்க கூடாதா? எல்லாருக்கும் வருமானம் முக்கியம் அமைச்சரே.
Rate this:
Cancel
CHARUMATHI - KERALA,இந்தியா
12-ஜூன்-202116:29:28 IST Report Abuse
CHARUMATHI To all who enjoyed critizing BJP first look into ur local tumil nadu. Senthi Balaji ha kanakule varugirar
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-ஜூன்-202115:14:01 IST Report Abuse
Pugazh V முகுல் ராயை பாஜக எதிர்கட்சி தலைவர் ஆக்கி இருந்தால் சுவேந்து பாஜி விலிருந்து ஏடி மம்தா பானர்ஜி கட்சியிடம் ஓடி.வந்திருப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X