பொது செய்தி

தமிழ்நாடு

செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா?

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணிகளாகவும், தோட்டங்களில் காவலுக்கும் நாய்களை வளர்க்கின்றனர்.குறிப்பாக, விலை அதிகமுள்ள லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்டு, பீகிள், டாபர்மேன், கிரேட் டேன் போன்ற வெளிநாட்டு வகைகளையும்,
 செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா?

பொள்ளாச்சி:வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணிகளாகவும், தோட்டங்களில் காவலுக்கும் நாய்களை வளர்க்கின்றனர்.குறிப்பாக, விலை அதிகமுள்ள லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர், ஜெர்மன் ஷெப்பர்டு, பீகிள், டாபர்மேன், கிரேட் டேன் போன்ற வெளிநாட்டு வகைகளையும், உள்நாட்டு பாரம்பரிய ரகங்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை ரகங்களையும் குடும்ப உறுப்பினரில் ஒருவர் போல பாசத்துடன் வளர்க்கின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இது, செல்லப்பிராணி பிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.பிராணிகளுக்கும் கொரோனா தொற்று பாதிக்கும் என்பதை அறிந்த பின்பு, தங்கள் வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கும் தொற்று ஏற்படலாம் என, அஞ்சுகின்றனர்.கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் முகக்கவசம், கைகளை சோப்பால் கழுவுதல், தடுப்பூசி போன்ற தடுப்புமுறைகளை பிராணிகளுக்கு பயன்படுத்துவது சாத்தியமில்லை.இதனால், செல்லப்பிராணிகளை, வீட்டு எல்லையை தாண்டாமல் பார்த்துக் கொள்வது, கூண்டுகள் அமைத்து அடைத்து வைப்பது, சங்கிலியால் கட்டி வைப்பது என, தொற்றில் இருந்து பாதுகாக்க அதிக கவனம் செலுத்துகின்றனர்.மேலும், வளர்ப்பு பிராணிகள் வாயிலாக, குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அஞ்சுகின்றனர்.கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஓம் முருகன் கூறுகையில், ''வளர்ப்பு நாய்கள் உள்ளிட்ட பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவும் என்பது இன்னும் ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும், முன்னெச்சரிக்கை கருதி, பிராணிகளை பராமரிப்பது, உணவளிப்பது என, அவற்றிடம் நெருங்கி இருக்கும்போது முகக்கவசம் அணியுங்கள். பின்னர், கைகளை நன்கு சோப்பு கொண்டு கழுவுங்கள். தற்போதைய சூழலில், செல்லப்பிராணிகளை வீட்டுக்கு வெளியில் விடுவதை தவிர்ப்பது நல்லது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X