பொது செய்தி

தமிழ்நாடு

எமனேஸ்வரம் ஊரணியில் கழிவுநீர் வெளியேற்றம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
எமனேஸ்வரம் : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெரு ஊரணியை துார்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவில் ஊரணி உள்ளது. இதனை சீரமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.அப்பகுதி மக்கள் முன்பு குடிநீர் மற்றும் பிற தேவைக்கு இந்த ஊரணியை நம்பி இருந்துள்ளனர். தொடர்ந்து வீடுகளில்

எமனேஸ்வரம் : பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெரு ஊரணியை துார்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவில் ஊரணி உள்ளது.

இதனை சீரமைக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.அப்பகுதி மக்கள் முன்பு குடிநீர் மற்றும் பிற தேவைக்கு இந்த ஊரணியை நம்பி இருந்துள்ளனர். தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சி வாறுகால் மூலம் ஊரணியில் விடப்பட்டதால் தண்ணீர் வீணானது.ஆழமான ஊரணியை சுற்றி இருந்த தடுப்புச்சுவரும் உடைந்துள்ளது. கழிவு நீரை வெளியேற்றி சீர் செய்ய அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ., முருகேசனிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து நகராட்சி சார்பில் பம்ப் செட் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. ஒட்டு மொத்தமாக துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X