பொது செய்தி

தமிழ்நாடு

திருவெற்றியூர் கோயிலில் வருமானம் குறைந்தது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
திருவெற்றியூர் : கொரோனா ஊரடங்கால் திருவெற்றியூர் கோயிலுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது.செவ்வாய், வெள்ளி நாட்களிலும், சித்திரை, ஆடியில் நடைபெறும் விழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், திருமணம், குழந்தை பாக்கியம்

திருவெற்றியூர் : கொரோனா ஊரடங்கால் திருவெற்றியூர் கோயிலுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாடானை அருகே சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது.செவ்வாய், வெள்ளி நாட்களிலும், சித்திரை, ஆடியில் நடைபெறும் விழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள். நோய்களால் பாதிக்கப் பட்டவர்கள், திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதலுக்காக நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் அதிகம் வருவர்.வேண்டுதல் நிறைவேறிய பின் கண்மலர், நாகம் போன்ற தங்கம்,வெள்ளி பொருட்கள், உப்பு, கோழி, சேவல், முட்டை போன்றவைகளை காணிக்கையாக செலுத்துவார்கள்.

இது தவிர எட்டு பிரார்த்தனை உண்டியல்களும் உண்டு. மூன்று அல்லது நான்கு மாதத்திற்கு ஒரு தடவை உண்டியல் திறக்கப்படும் போது பல லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, மற்றும் பணம் இருக்கும். கொரோனா ஊரடங்கால் இக் கோயிலுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் இக் கோயிலில் உள்ள பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர் மற்றும் தெய்வங்களுக்கு ஐந்து கால பூஜைகள் முறையாக நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X