கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தடகள பயிற்சியாளர் ஜாமின் மனு தள்ளுபடி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை:தடகள வீராங்கனைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிறையில் உள்ள பயிற்சியாளர் நாகராஜனுக்கு, ஜாமின் வழங்க, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் நாகராஜன், 59. 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற, தடகள பயிற்சி அகாடமியை, பாரிமுனையில் நடத்தி வருகிறார். இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற, 20க்கும் மேற்பட்ட வீராங்கனைகளுக்கு, பாலியல் தொல்லை

சென்னை:தடகள வீராங்கனைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிறையில் உள்ள பயிற்சியாளர் நாகராஜனுக்கு, ஜாமின் வழங்க, 'போக்சோ' சிறப்பு நீதிமன்றம் மறுத்துள்ளது.

சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் நாகராஜன், 59. 'பிரைம் ஸ்போர்ட்ஸ்' என்ற, தடகள பயிற்சி அகாடமியை, பாரிமுனையில் நடத்தி வருகிறார். இவர், தன்னிடம் பயிற்சி பெற்ற, 20க்கும் மேற்பட்ட வீராங்கனைகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனை ஒருவர், சென்னை, பூக்கடை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். நாகராஜன் மீது, 'போக்சோ' உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். நீதிமன்றக் காவலில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஜாமின் வழங்கக் கோரி, போக்சோ நீதிமன்றத்தில், நாகராஜன் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி, 'விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே, தற்போதைய நிலையில், ஜாமின் வழங்க முடியாது' என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X