பொது செய்தி

தமிழ்நாடு

மழை வருது: இளந்தென்னை ஜாக்கிரதை! எச்சரிக்குது வேளாண் துறை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பருவமழைக்காலத்தில், இளம் தென்னங்கன்றுகள் குருத்தழுகல் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால், உரிய பராமரிப்புகளை மேற்கொள்ள வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக வறட்சி நீங்கி, பாசன ஆதாரங்கள் வளமாக உள்ளதால், அதிகளவில் தென்னை நடவு செய்யப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் இளம் தென்னங்கன்றுகளுக்கு குருத்தழுகல் நோய்
 மழை வருது: இளந்தென்னை ஜாக்கிரதை! எச்சரிக்குது வேளாண் துறை

பொள்ளாச்சி;பருவமழைக்காலத்தில், இளம் தென்னங்கன்றுகள் குருத்தழுகல் நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளதால், உரிய பராமரிப்புகளை மேற்கொள்ள வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக வறட்சி நீங்கி, பாசன ஆதாரங்கள் வளமாக உள்ளதால், அதிகளவில் தென்னை நடவு செய்யப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில் இளம் தென்னங்கன்றுகளுக்கு குருத்தழுகல் நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.எனவே, விவசாயிகள் பருவ மழை துவங்க உள்ள நிலையில், இளந்தென்னை பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி கூறியதாவது:பருவமழை காலத்தில் வெப்பநிலை குறைவாகவும் ஈரப்பதம் மிக அதிகமாகவும் இருக்கும். இதனால் இளம் கன்றுகள் குருத்தழுகல் நோயால் பாதிப்படையக்கூடும்.நோய் அறிகுறிகள்தென்னை இளங்கன்றுகளில் குருத்தழுகல் நோய் தாக்கப்பட்ட குருத்துகள், பழுப்பு நிறமாக மாறி, மெதுவாக இழுத்தாலே கையோடு வந்துவிடும். இலையின் அடித்திசுக்கள் விரைவில் அழுகி, உச்சியிலிருந்து இழுத்தால் எளிதில் பெயர்ந்து வந்து விடும். நோய் முற்றிய நிலையில் குருத்துகள் வாடி, உதிர்ந்து விடக்கக்கூடும்.உச்சியில் உள்ள இளம் இலைகளின் அடிப்பகுதி மற்றும் உச்சியில் உள்ள மென்மையான திசுக்கள் அழுகி வழவழப்பாக மாறி துர்நாற்றம் வீச துவங்கும். மரம் மடிந்து விடும்.பராமரிப்பு முறைநோய் தாக்கப்பட்ட கொண்டைப் பகுதியை அகற்றிவிட்டு, புதிய குருத்து வரும் வரை, போர்டோ பசை தடவி, மழை நீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.ஒரு லிட்டர் போர்டோ பசை தயாரிக்க, 100 கிராம் காப்பர் சல்பேட் மற்றும், 100 கிராம் நீர்த்த சுண்ணாம்பை தனித்தனியே 500 மி.லி., தண்ணீரில் கலந்து, பிறகு இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்.பருவ மழை தீவிரமாகும் முன், 1 சதவீத போர்டோ கலவை அல்லது, 0.25 சதவீத காப்பர் ஆக்ஸிகுளோரைடை, நோய் பாதித்த கன்றுக்கு அருகில் உள்ள கன்றின் கொண்டையில் தெளிக்க வேண்டும்.நோய் தாக்கப்பட்ட மற்றும் அருகில் உள்ள மரங்களின் மீதும் தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கலாம். பருவமழைக்கு பின், 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடை மீண்டும் தெளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X