பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காயம் சாகுபடிக்கு உரத்தட்டுப்பாடு: ஓரிரு நாட்களில் வரும்; வேளாண் துறை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
உடுமலை:டி.ஏ.பி., உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சின்ன வெங்காய சாகுபடி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.உடுமலை பகுதிகளில், சின்ன வெங்காயம் சாகுபடிக்கு, ஆனி பட்டம் சரியான தருணம் என்பதாலும், தற்போது நல்ல விலை கிடைத்து வருவதாலும், அதிகளவு விவசாயிகள் வெங்காய நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது, உழவு, நடவு உள்ளிட்ட

உடுமலை:டி.ஏ.பி., உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சின்ன வெங்காய சாகுபடி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.உடுமலை பகுதிகளில், சின்ன வெங்காயம் சாகுபடிக்கு, ஆனி பட்டம் சரியான தருணம் என்பதாலும், தற்போது நல்ல விலை கிடைத்து வருவதாலும், அதிகளவு விவசாயிகள் வெங்காய நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது, உழவு, நடவு உள்ளிட்ட பல்வேறு பணி நடந்து வருகிறது.சாகுபடிக்கு அடியுரமாக, டி.ஏ.பி., உரம் இட வேண்டும்; தற்போது சாகுபடிக்கு தேவையான, டி.ஏ.பி., உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தனியார் கடைகளிலும், டி.ஏ.பி., உரம் இருப்பு இல்லை என்று கூறுகின்றனர். இதனால், சாகுபடி பணிகளை துவக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தலைவர் மதுசூதனன், செயலாளர் குமார் ஆகியோர் கலெக்டருக்கு அனுப்பிய மனு :கடந்த மாதம், மத்திய அரசு உரம் விலையை உயர்த்திய போது, டி.ஏ.பி., உரம் ஒரு மூட்டை, 1,200 ரூபாயாக இருந்தது. அதற்கு முன்பாகவே, 1,900 ரூபாய்க்கு விற்கலாம் என, வியாபாரிகள், இருப்பு இல்லை என்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.விலை அதிகம் கொடுக்கும் விவசாயிகளுக்கு மட்டும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், டி.ஏ.பி., உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேவையான அளவு டி.ஏ.பி., உரத்தை பெற்று, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, விற்பனை செய்ய வேண்டும். உரம் இருப்புகுறித்து, வெளிப்படையான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.வேளாண் இணை இயக்குனர் மனோகர் கூறுகையில், ''தென்மேற்கு பருவத்தில், பயிர் சாகுபடிக்கு கூடுதல் டி.ஏ.பி., உரம் தேவையென, அரசுக்கு கடிதம் எழுதியிருந்தோம். தற்போது, இருப்பு இல்லை. கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு, 1,200 டன் டி.ஏ.பி., உரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூருக்கு மட்டும், 400 டன் வரை கிடைக்கும். ஓரிரு நாட்களில், டி.ஏ.பி., உரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு வந்துவிடும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X