சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் வக்கீல் அடாவடி பார் கவுன்சிலுக்கு கடிதம்

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:'வாகன சோதனையின்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பார் கவுன்சிலுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார்.சென்னை, சேத்துப்பட்டில் சில நாட்களுக்கு முன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண்ணும், அவரது வக்கீல் பயிற்சியாளர் பெண்ணும் போலீசாரிடம்

சென்னை:'வாகன சோதனையின்போது, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட, பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பார் கவுன்சிலுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை, சேத்துப்பட்டில் சில நாட்களுக்கு முன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பெண்ணும், அவரது வக்கீல் பயிற்சியாளர் பெண்ணும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.விசாரணையில் பயிற்சியாளர், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தனுஜா கத்துலா என்பதும், அந்த இளம்பெண், அவரது மகள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், தனுஜா கத்துலா மீது, ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, 'சம்மன்' அனுப்பினர்.போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மற்றும் அவரது மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பார் கவுன்சிலுக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

கடிதத்தில் போலீஸ் கமிஷனர் கூறியிருப்பதாவது:வழக்கறிஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது. வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார், தங்கள் கடமையை செய்ய, வழக்கறிஞர்கள் உதவியாக இருக்க வேண்டும்; இடையூறாக இருக்கக் கூடாது என்பதை வழக்கறிஞர்களுக்கு வலியுறுத்த வேண்டுகிறோம்.போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனுஜா கத்துலா மற்றும் அவரது மகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NATARAJAN R - bangalore,இந்தியா
13-ஜூன்-202115:40:55 IST Report Abuse
NATARAJAN R இதுபோல அடாவடி செய்யும் ஒவ்வொருவரையும் விசாரித்து, அவர் எந்த துறையில் பணிபுரிகிறார் என்பதை அறிந்து, அந்த துறையின் மேலதிகாரிக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரி கடிதம் எழுத வேண்டுமா ? அவ்வாறு தான் சட்டம் சொல்கிறதா? என்ன கேவலம் ? இருசக்கர வாகனத்தின் சாவியை உடனே பறிக்கும் நீங்கள், பிஎம்டபிள்யூ கார் என்றவுடன் பதட்டம் ஏற்பட்டது ஏன்? வக்கீல் என்றவுடன் இன்னும் நடுங்கியது ஏன்? ஒரு சாதாரண மனிதன் என்றால் உங்களை இவ்வளவு கேவலமாக பேசுவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை நாடறியும். கடைசியில் இந்த வக்கீலுடன் சமரசமாக போவீர்கள். ஓரத்தில் செய்தி வரும். இந்த பெண்மணி சட்டத்தை மதிக்கவில்லை. மாஸ்க் அணிய வில்லை. அவளிடமிருந்து காரை பறிமுதல் செய்ய போலீஸ்காரர்களுக்கு துணிவில்லை. போடா என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போவதை போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்தார்கள். கேட்டால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று டயலாக் வேறு.
Rate this:
Cancel
13-ஜூன்-202111:05:40 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு அதே தவறை செய்த ஆட்டோ டிரைவர் கைது.. ரவுடி வக்கீல் சுதந்தரமாக இருக்கிறாள் .. பார் கொன்சில்லக்கு கடிதம்.. போலீசுக்கு மட்டுமல்ல நீதிமன்றமே வக்கீல்களை பார்த்து பயப்படுவதன் காரணம் ஏன் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X