பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனையில் கட்டமைப்பு வசதி: தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மா.கம்யூ., கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மா.கம்யூ., கட்சி சார்பில் அரசுக்கு அனுப்பியுள்ள மனு :மடத்துக்குளம் நால்ரோட்டில் செயல்பட்ட சுகாதார நிலையம், 2015ஆம் ஆண்டு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்குப்பின்பு, 51 படுக்கை வசதிகளுடன்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மா.கம்யூ., கட்சியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மா.கம்யூ., கட்சி சார்பில் அரசுக்கு அனுப்பியுள்ள மனு :மடத்துக்குளம் நால்ரோட்டில் செயல்பட்ட சுகாதார நிலையம், 2015ஆம் ஆண்டு தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்குப்பின்பு, 51 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இங்கு தினமும், 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நகரப்பகுதி மற்றும் அருகிலுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர்.தரம் உயர்த்தப்பட்டு, ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், இங்கு முழுமையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை. சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, தகுந்த அளவில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை.துாய்மைப்பணியாளர்களும் கூடுதலாக தேவைப்படுகிறது. இதுதவிர, ஜெனரேட்டர் வசதி இல்லாததால், மின் தடை ஏற்படும் போது மருத்துவமனை இருளில் மூழ்குகிறது. உணவு தயாரிக்க சமையல் கூடம் வசதி இல்லை.மருத்துவமனைக்கு தனியான ஆம்புலன்ஸ் வசதி கிடையாது. இந்தக் கட்டமைப்புகள் இல்லாததால், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில், முழுமையான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X