சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜூன் 17ல் பாம்பனில் மீன்பிடிப்பு: மீனவர்கள் குழப்பம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : பாம்பன் மீனவர்கள் ஜூன் 17ல் மீன்பிடிக்க ஆயத்தமாகி வருவதால், பிற பகுதி மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர். தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை காலம் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளது. ஊரடங்கினால் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி விசைப்படகுகளில் மராமத்து பணி முடியாமல் மீனவர்கள் திணறி வருகின்றனர்.கொரோனா பரவல் தடுக்க தடுப்பூசி போட்ட பின் ஜூலை 1ல் மீன்பிடிக்க

ராமேஸ்வரம் : பாம்பன் மீனவர்கள் ஜூன் 17ல் மீன்பிடிக்க ஆயத்தமாகி வருவதால், பிற பகுதி மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை காலம் முடிய இன்னும் 3 நாட்கள் உள்ளது. ஊரடங்கினால் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதி விசைப்படகுகளில் மராமத்து பணி முடியாமல் மீனவர்கள் திணறி வருகின்றனர்.கொரோனா பரவல் தடுக்க தடுப்பூசி போட்ட பின் ஜூலை 1ல் மீன்பிடிக்க செல்ல ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் முடிவு செய்தனர்.ஆனால் பாம்பனில் உள்ள விசைப்படகுகளின் மராமத்து பணி முடிவடைந்துள்ளது. இவர்கள் ஜூன் 17ல் மீன்பிடிக்க ஆயத்தமாகி வருவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

ராமேஸ்வரம், மண்டபம், பிற பகுதியில் படகில் மராமத்து பணி முடியாமல் உள்ளதால், மீனவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.பாம்பன் மீனவர்கள் கூறுகையில்; ஜூன் 15 ல் துாத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால், நாங்களும் மீன்பிடிக்க செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஜூன் 17ல் மீன்பிடிக்க செல்ல வாய்ப்பு உள்ளது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X