பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 11, 2021
Share
ராமநாதபுரம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மதுரை ரோடு சாலைத்தெரு சந்திப்பு

ராமநாதபுரம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்., சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதை கண்டித்து காங்., சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ராமநாதபுரம் மதுரை ரோடு சாலைத்தெரு சந்திப்பு அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பினுலால் சிங் பங்கேற்றார்.சேவாதள மாவட்ட தலைவர் காருகுடி சேகர், மாவட்ட பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், காவனுார் கருப்பையா முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுசி மகாலிங்கம், ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் பிச்சை, மோதிலால் நேரு, ஆசிர் உட்பட பலர் பங்கேற்றனர்.ராமநாதபுரம் குமரய்யா கோயில் பஸ்ஸ்டாப் பெட்ரோல் பங்க், பட்டணம்காத்தான், பரமக்குடி, சத்திரக்குடி, பார்த்திபனுார், நயினார்கோவில், கமுதி, அபிராமம், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம்,உச்சிப்புளி, கீழக்கரை, திருப்புல்லாணி, சிக்கல், திருவாடானை, தொண்டி, முதுகுளத்துார் உட்பட 21 இடங்களில் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X